நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
- நான்கு ஓமவல்லி இலை, சிறிய துண்டு சுக்கு, ஐந்து நல்ல மிளகு, கருப்பட்டி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து குடித்துவர ஜலதோஷம் குணமாகும்.
- தூக்கமில்லாது அவதிப்படுவோர் சிறிது சீரகத்தை வறுத்து பொடியாக்கி, ஒரு செவ்வாழைப் பழத்துடன் இரவு சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.
- கொத்தமல்லி விதைகளை லேசாக வறுத்து, துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கிறுகிறுப்பு மாறும்
- சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால், நிவாரணம் கிடைக்கும். சுக்கு, பனை வெல்லம், உளுந்து ஆகியவற்றை சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால், உடலுக்கு பலமுண்டாகும்.
- சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையில் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து அதில் ஓர் தேக்கரண்டியைத் தேனில் குழைத்து 10 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பிரச்னை சரியாகும்.
- மழை, குளிர்காலத்தில் கிரீன் டீ அல்லது கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் அன்னாசிப் பூவைப் போட்டு, வடிகட்டி பருகினால் சுவாசம் எளிதாகும். தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப் பூப்பொடி சேர்த்தால் சோர்ந்திருக்கும் மூச்சுக் குழாய் உற்சாகமடையும்.
- பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி துண்டுகள், வதக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள், பொடித்த அன்னாசிப் பூ போன்றவற்றை நெய்யில் வதக்கி உணவாகச் சாப்பிட்டால், கப நோய்களை எதிர்த்து நிற்கும் வன்மையை உடலுக்கு அளிக்கும்.
- தொண்டை கரகரக்கும்போது, சிற்றரத்தையை நெருப்பில் எரித்து அதை தேனில் குழைத்து அதன் உரைப்பு நாவிலும் தொண்டையிலும் தவழும்படி சாப்பிட்டால் கரகரப்பு கரைந்து தொண்டை இதமாகும்.
- ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து பொடியாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம் பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை சூடாக சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.