பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நீக்கம்: செந்தில் பாலாஜி உடன் சந்திப்பு எதிரொலி

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் சந்தித்ததைத் தொடர்ந்து பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மைதிலி வினோ இவர் பாஜகவில் மாநில மகளிர் அணி செயலாளராக இருந்து வந்தார். பாஜகவின் கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கட்சி அடிப்படை பொறுப்பில் இருந்து மைதிலி வினோவை நீக்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இது குறித்து மைதிலி வினோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“1999 -இல் பாஜகவில் இணைந்து இக்கட்சியில் மகளிர் இல்லாத கால கட்டத்தில் இருந்து தான் வந்துள்ளாதகவும் தாமரை சின்னம் என்னவென்றே தெரியாதபோது மக்களிடம் கொண்டு சென்று மாவட்டத்தின் பொது செயலாளராக பணியாற்றி மாநில செயலாளர் அளவிற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் தற்போது உள்ள பாஜக – பணத்திற்கு விலை போய்விட்டது எனவும் பாஜகவில் பணி செய்து முன்னேறுவோம் என அன்றைய கோட்பாடு இருந்ததாகவும். ஆனால், தற்போது ரூ.300 கோடி அளவில் பணம் இருந்தால் மாவட்டத் தலைவர் ஆகி விடலாம் என்ற கோட்பாடு வந்துள்ளதாக தெரிவித்தார்.

இரு நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்க்க சென்றதாகவும் அப்போது அங்கு எடுத்த புகைபடத்தை வைத்து பாஜக கோவை மாவட்ட தலைவர் அறிக்கை ஒன்று வெளியிட்டு அதில் பாஜக கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்கள்.

அமைச்சரை பார்த்ததற்காக கட்சியில் இருந்து நீக்கினால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை எனவும்.
கட்சி ரீதியாக கட்ட பஞ்சாயத்து போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டது போல் கலங்கம் ஏற்படுத்தி குறிப்பிட்டுள்ளதாகவும் இதற்கு மாவட்ட தலைவர் உத்தம பாலாஜி விளக்கம் சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தான் 1999ல் இருந்து பாஜகவில் இருந்ததற்கு ஆதாரம் வைத்துள்ளதாகவும். அதே போல 1989-ல் பாஜகவில் உத்தம ராமசாமி இருந்ததாக கூறுகிறார். அவரை அதற்கான ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள் என மைதிலி வினோ கூறினார்.

தான் களபணிகள் செய்து பாஜகவில் பதவி வாங்கியுள்ளதாகவும், ஆனால் தற்போது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பதவி என பாஜகவில் பணத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், தன்னை மாதிரி அதிக நபர்கள் பாஜகவில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

பாஜகவில் இருந்து விலகி போகிறவர்கள் பரிவார சங்கத்துக்கு செல்வதாகவும் அரசியலுக்காக வந்தால் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இதில் இருந்து மற்ற கட்சிக்கு போவது தவறில்லை எனவும், தான் எடுத்த முடிவுக்கு பாராட்டுகள் வந்துள்ளதாகவும், பாஜகவில் பழைய நிர்வாகிகளுக்கு அங்கிகாரம் கொடுக்கவில்லை என்றாலும் கேவலபடுத்தாமல் இருக்கலாம் என மைதிலி வினோ தெரிவித்தார்.

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இருந்து வெளியில் வர வாய்ப்புள்ளதாகவும், கட்சி தன்னை விலக்கவில்லை, தான்தான் கட்சியில் இருந்து விலகி செல்கிறேன் எனவும் கொள்கைக்காக இருந்த கட்சி தற்போது பணத்திற்காக விலை போய்விட்டது என தெரிவித்தார்.

மாநில பொறுப்பு வேண்டுமென்றால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் – மாவட்ட பொறுப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய்- மண்டல பொறுப்பிற்கு 5 ஆயிரம் என மாதந்தோறும் செலவு செய்ய வேண்டும் என அதிகார பூர்வமாக கேட்கின்றனர்.

அண்ணாமலை ஒரே பாட்டில் சுவிட் விக்கணும் – ரியல் எஸ்டேட் பண்ணனும் – பணக்காரராக ஆகணும் அரசியல் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார் என தெரிவித்தார்.

அவருடைய வேகத்திற்கு புதிய ஆட்களும் தேவை, அதே போல் அனுபமும் தேவை எனவும், இதற்கு முன் திமுக, பாஜக வாஜ்பாய் உடன் கூட்டணி அமைத்தார்கள், இப்போது தான் திமுகவிற்கு செல்கிறேன் என்று சொன்னவுடன் கலங்கம் ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள்.

பாஜகவில் இருந்து வேலை செய்த வலியும் – வேதனையும் தனக்கு தான் தெரியும் எனவும் – நாளை முதலமைச்சரை சந்தித்து திமுகவில் இணைவதாகவும் இனிமேல் திமுக மட்டும் தான் இருக்க போவதகவும் அதில் இணைந்து செயல்பட போதவதாகவும் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.