உன்னாவ்: உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண்ணை கட்டிபிடித்து கொஞ்சிய போலீஸ் ஏட்டு சஸ்பெண் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுக்கு பின் ஆபாச வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த பாங்கர்மாவ் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு தீப் சிங் என்பவர், பெண் ஒருவருடன் ஆபாசமாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்றாலும் கூட, தற்போதுதான் அந்த வீடியோ வெளியே வந்துள்ளது. அதையடுத்து ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாங்கர்மாவ்வில் காவல் நிலைய ஏட்டு தீப் சிங், கடந்த 2 ஆண்டுக்கு முன் கோட்வாலி காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் நடந்து கொண்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதையடுத்து உன்னாவ் எஸ்பி உத்தரவின் பேரில் ஏட்டு தீப் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக அந்த பெண்ணிடம் அவர் ஆபாசமாக நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.