சென்னை: 2025-க்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காசநோய், டெங்கு, மலேரியாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அரசிடம் தனியார் மருத்துவமனை தர வேண்டும். எலும்பூரில் ரூ.66 கோடியில் புதிய கண் மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.