முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக தெலங்கானா மாநில பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங், கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாம் மற்றும் முகமது நபிகள் குறித்து அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறி பேசிய வீடியோ வைரலானது. இதையடுத்து பாஜக எம்எல்ஏ ராஜா சிங் அம்மாநில போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பியுள்ள நோட்டீஸில் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு ராஜா சிங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லையென்றால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM