ஐதராபாத்: தெலங்கானாவில் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங், கடந்த சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட மதத்தினரை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறி பேசிய வீடியோ வைரலானது.
அதனால் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருந்ததால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை டபீர்புரா போலீசார் கைது செய்தனர்.
இன்று காலை ராஜா சிங்கின் வீட்டிற்கு வந்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்னதாக ஐதராபாத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் எம்எல்ஏ ராஜா சிங்குக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.