கறிக்குழம்பை கடாசிய கணவர்.. மனவேதனையில் மனைவி தற்கொலை..!

சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் மனவேதனை அடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூரை அடுத்த சிவன்படபேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் கீதா(26) என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கீதா ஆட்டுக்கறி குழம்பு சமைத்து வைத்திருந்தார். மதியம் கணவருக்கு அதை பறிமாறினார். அப்போது குழம்பு காரமாக இருப்பதாகக் கூறி சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை சுந்தரமூர்த்தி வெளியே வீசியுள்ளார்.

இதுதொடர்பாக கணவன் – மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கீதா மனவேதனை அடைந்தார். அதன் பின்னர் சுந்தரமூர்த்தி அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

அந்த நேரத்தில் கீதா வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடைக்கு சென்று திரும்பிய சுந்தரமூர்த்தி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது, கீதா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மனைவியை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீதாவை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கீதாவின் தாய் வாசுகி கொடுத்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.