சென்செக்ஸ்: 2 மாதத்தில் மோசமான சரிவு.. முதலீட்டாளர்களே உஷார்..!

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மும்பை பங்குச்சந்தை 2 நாள் தொடர்ந்து சரிந்து 6.57 லட்சம் கோடி இழப்பையும், 2 மாத்தில் மோசமான சரிவைப் பதிவைச் செய்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 151.12 புள்ளிகள் உயர்வுடன் துவங்கினாலும் 2 நாள் சரிவில் பெரும் முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரையில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகளவில் உள்ளது.

59,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. 4 முக்கிய காரணங்கள்!

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

19ஆம் தேதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அடுத்த ரவுண்ட் வட்டி விகிதம் கணிப்பைக் காட்டிலும் விரைவாக வரும் என்ற அச்சம் அதிகரித்த காரணத்தால் அதிகப்படியான பங்குகளை மும்பை பங்குச்சந்தையில் விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றினர்.

திங்கட்கிழமை சரிவு

திங்கட்கிழமை சரிவு

இந்தச் சரிவு திங்கட்கிழமை வர்த்தகத்திலும் எதிரொலித்துச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 872 புள்ளிகள் சரிந்தது. வெள்ளி மற்றும் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் 1524 புள்ளிகளையும், நிஃப்டி 465 புள்ளிகளை இழந்தது.

 மொத்த மூலதன மதிப்பு
 

மொத்த மூலதன மதிப்பு

இதன் விளைவு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களது மொத்த மூலதன மதிப்பு 2 நாளில் 6.57 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர். இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு 280.50 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 273.95 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

17-18 சதவீத உயர்வு

17-18 சதவீத உயர்வு

ஜூன் 17-க்கு பின்பு அன்னிய முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம், விலைவாசியில் உருவான தற்காலிக சரிவு ஆகியவற்றின் மூலம் ஆகஸ்ட் 18 வரையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 17-18 சதவீதம் வரையில் உயர்ந்தது.

பெடரல் ரிசர்வ் வங்கி

பெடரல் ரிசர்வ் வங்கி

இதேவேளையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வுக்குப் பின்பு இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் அதிகரித்து, அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவானது.

டாலர் ரூபாய்

டாலர் ரூபாய்

அனைத்தையும் தாண்டி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த காரணத்தால் இறக்குமதி பொருட்களின் விலையும் பெரிய அளவில் உயர்ந்தது. நாஸ்டாக் காம்போசிட் குறியீடு கடந்த 5 நாளில் 5.36 சதவீதம் சரிந்துள்ளது. டாவ் ஜோன்ஸ் குறியீடு 2.54% சரிவு, எஸ் அண்ட் பி குறியீடு 3.55% சரிந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையின் இரண்டு நாள் தொடர் சரிவுக்கு உள்நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயர்வைத் தாண்டி சர்வதேச சந்தையில் உலக நாடுகளின் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி அளவுகள் மற்றும் இதைச் சமாளிக்க மத்திய வங்கி எடுக்கும் மாறுபட்ட முடிவுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கலவையான மனநிலையை உருவாக்கியுள்ளது.

சியோல், டோக்கியோ, ஹாங்காங்

சியோல், டோக்கியோ, ஹாங்காங்

திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் சியோல், டோக்கியோ, ஹாங்காங் போன்ற சந்தைகளும் சரிவை சந்தித்துள்ளது. இதற்கிடையில் சீனாவின் மத்திய வங்கி தனது நாணய கொள்கை முடிவில் தனது வட்டி விகிதத்தை 3வது முறையாகக் குறைத்துள்ளது. 2022ஆம் ஆண்டில் ஏற்கனவே 2 முறை வட்டியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 மாதத்தில் மோசமான சரிவு

2 மாதத்தில் மோசமான சரிவு

இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தையில் நேற்று பதிவான 872 புள்ளிகள் சரிவு என்பது 2 மாதத்தில் பதிவான மோசமான சரிவாக உள்ளது. இந்தச் சரிவுக்கு அடித்தளமே பலவீனமான குளோபல் மார்கெட் மற்றும் அதிகரித்து வரும் டாலர் இன்டெக்ஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex lost 1500 pts in 2 days amid global markets reel; worst fall in 2 months

Sensex lost 1500 pts in 2 days amid global markets reel; worst fall in 2 months சென்செக்ஸ்: 2 மாத சரிவு, 6.57 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்களே உஷார்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.