2 மாதங்களில் 28,000 கிமீ பயணம்… ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-ஆல் ஏற்பட்ட பிரச்சனை!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களை சினிமா ரசிகர்கள் தெரியாமல் இருக்க முடியாது.

அவர் இயக்கிய ‘ஜாஸ்’, ‘ஜுராசிக் பார்க்’ உள்பட பல திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் கடந்த 2 மாதங்களில் சுமார் 28 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் விமானம் கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 28,000 கிமீ பயணம் செய்துள்ளதாகவும் இதனால் சுமார் ரூ. 92 லட்சம் மதிப்புள்ள ஜெட் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விமான கண்காணிப்பு தரவு

இதுகுறித்து விமான கண்காணிப்பு தரவு அமைப்பான ADS-B எக்ஸ்சேஞ்ச் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஸ்பீல்பெர்க் தனது Gulfstream G650 ஜெட்டில் ஜூன் 23 முதல் கிட்டத்தட்ட 28,000 கிமீ தூரத்தில் 16 பயணங்களை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளது. அவருடைய இரண்டு மாத பயணத்தால் மட்டும் காற்றின் மாசுபாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாகவும் சர்ச்சையாகியுள்ளது.

ஸ்பீல்பெர்க்கின் பயணங்கள்

ஸ்பீல்பெர்க்கின் பயணங்கள்

ஸ்பீல்பெர்க்கின் ஜெட் ஜூன் 29 அன்று நியூயார்க்கின் வெஸ்ட்ஹாம்ப்டனில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வரை சுமார் 6,000 கிமீ பயணம் செய்துள்ளது. இதனால் $21,183 மதிப்புள்ள எரிபொருள் பயன்படுத்தப்பட்டதால் 32 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேறியுள்ளது. அதேபோல் ஜூலை 1 அன்று வெஸ்ட்ஹாம்ப்டனுக்கு திரும்புவதற்கு முன், விமானம் நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு பயணித்தது. இதனால் $24,685 மதிப்புள்ள எரிபொருள் பயன்படுத்தப்பட்டதால் மேலும் 38 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேறியுள்ளது.

நீண்ட பயணங்கள்
 

நீண்ட பயணங்கள்

மேலும் ஜூலை 11 அன்று வெஸ்ட்ஹாம்ப்டனிலிருந்து கலிபோர்னியாவிலுள்ள வான் நியூஸ் வரையிலும், ஜூலை 21 அன்று வெஸ்ட்ஹாம்ப்டனிலிருந்து அயர்லாந்தின் நாக் வரையிலும், நியூ ஜெர்சியின் டெட்டர்போரோவில் இருந்து ஆகஸ்ட் 4 அன்று வான் நியூஸ் வரையிலும் ஸ்டீவன் ஜெட் நீண்ட பயணங்களை மேற்கொண்டது.

கார்பன் டை ஆக்சைடு

கார்பன் டை ஆக்சைடு

ஒட்டுமொத்தமாக, ஸ்பீல்பெர்க்கின் ஜெட் கடந்த இரண்டு மாதங்களில் குறைந்தது 179 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக ஒரு அமெரிக்கர் ஒரு ஆண்டுக்கு 16 டன் கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றி வரும் நிலையில் ஸ்டீவன் பல மடங்கு அதிகமாக வெளியேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதல் குறித்து கவலை

புவி வெப்பமடைதல் குறித்து கவலை

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், புவி வெப்பமடைதல் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும், சுற்றுச்சூழலின் தாக்கத்தை பற்றி கவலைப்படாமல் பலர் வெறித்தனமாக பயணம் செய்கிறார்கள் என்றும் கூறினார். ஆனால் இன்று அவரே மிக நீண்ட பயணம் செய்து கார்பன் டை ஆக்சைடு ஏற்பட காரணமாகியுள்ளார் என்று விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Steven Spielberg Private Jet Burned Rs.92 Lakh Worth Of Fuel In 2 Months

Steven Spielberg’s Private Jet Burned ₹92 Lakh Worth Of Fuel In 2 Months | 2 மாதங்களில் 28,000 கிமீ பயணம்… ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-ஆல் ஏற்பட்ட பிரச்சனை!

Story first published: Tuesday, August 23, 2022, 6:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.