விவசாயி தீக்குளிப்பு| Dinamalar

மஹாராஷ்டிராவின் தாராஷிவ் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுபாஷ் தேஷ்முக். இவருக்கு தன் சகோதரர்களுடன் நிலத்தகராறு இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்தார். மும்பைக்கு நேற்று வந்த அவர், சட்டசபை வளாகத்தின் நுழைவு வாயில் அருகே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதே பிரச்னைக்காக சில மாதங்களுக்கு முன், சுபாஷின் தந்தையும் தீக்குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மஹா., துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், “விவசாயி தீக்குளித்தது துரதிர்ஷ்டவசமானது. அவருடைய பிரச்னை குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,”என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.