`சாதி மத மோதல்களுக்கு வாய்ப்பிருக்கு…. தடுக்க தயாரா இருங்க’- டிஜிபி சுற்றறிக்கை

காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் எதிர்வரும் நாட்களில் தயார் நிலையில் இருக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்
தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாகள், தொடர்ந்து வரவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது. அப்படி ஏற்படும் போது இருபிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகிறது என்ற நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள ஆயுதப்படைகளில் டிஜிபி தலைமையில் சில முக்கிய முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
image
இதை சுற்றறிக்கை வழியாக அவர் காவலர்களுக்கு அனுப்பியுள்ளார். சுற்றறிக்கையின்படி
1) மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆளிநர்களுக்கும், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை காவல் நிலை ஆணைப்படியும் (Police Standing Order) பயிற்சி கையேட்டின் படியும் (Drill Manual) கவாத்து பயிற்சி வழங்க வேண்டும். இப்பயிற்சியை ஆயுதப்படையில் உள்ள உயர் அதிகாரிகள் (காவல் ஆய்வாளர்கள் மற்றும் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள்) கண்காணிக்கவும் கலந்து கொள்ளவும் அவர்களை அறிவுறுத்த வேண்டும்.
image
2) ஆயுதப்படையில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலவர சம்பவங்களில் (Riot Drill) படையை வழிநடத்துவதற்கு அவ்வப்போது உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
3) ஆயுதப்படையில் கேடயம் (Shield), லத்தி (Lathi), ரப்பர் தோட்டாக்கள் (rubber bullets), பிளாஸ்டிக் தோட்டாக்கள் ( Plastic bullets), பம்ப் ஆக்ஷன் கன் (pump action gun), கேஸ் கன் (Gas gun) கேஸ் செல்கள் மற்றும் இதர் ஆயுதங்கள் போதுமான அளவில் உள்ளளவா?, சரியாக வேலை செய்கின்றனவா? ஏன அவ்வப்போது தணிக்கை செய்வதுடன், எவ்வாறு கையாள வேண்டுமென் கலாத்து பயிற்சகியின்போதே காவல் ஆளிநர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.
4) கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும். வஜ்ரா, வருள் மற்றும் இதர வாகனங்களை முறையாகப் பராமரித்து தயார் நிலையில் வைப்பதற்கு அறிவுறுத்தப்படவேண்டும்.
image
5) ஒலிபெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு செய்யவும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
எனவே நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவல்களை தயார் நிலையில் வைத்து, முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு அவர்களை உட்படுத்தஅனைத்து மாநகர காவல் ஆணையர்கள் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.