வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: என்டிடிவி பங்குகளை, அதானி நிறுவனம் வாங்கியது தொடர்பாக, தங்களுக்கு எந்த தகவல் தெரிவிக்கப்படாமலும், ஒப்புதல் பெறாமலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்டிடிவி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. இந்த பங்குகள் மூன்றில் ஒரு பங்கு. இதனால், என்டிடிவி நிர்வாக முடிவுகளை எடுக்கக்கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் அந்தஸ்தை பெற்றுள்ளது.
இது தொடர்பாக என்டிடிவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: என்டிடிவி எப்போதும் அதன் செயல்பாட்டில் அதன் இதழியலில் சமரசம் செய்ததில்லை. நாங்கள் எங்கள் பாணி இதழியலை பெருமிதத்துடன் தொடர்கிறோம்.
இந்த மொத்த பரிவர்த்தனையும் எவ்வித ஆலோசனையும் இல்லாமல், தகவலும் தெரிவிக்கப்பலாமல், ஒப்புதல் பெறாமலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement