சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்றுமுதல் 4 நாட்கள் அனுமதி!

விருதுநகர்: அமாவாசையையொட்டி, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

விருதுநகர் மாவட்டம்  மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பங்கதர்கள் மாதம்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பசென்று வழிபடுவது வழக்கம். ஆனால், அவ்வப்போது மழை பெய்து வருவதால், மலைப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படும். அந்த நாட்களில் பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறை தடை விதிக்கும். தற்போது மழை இல்லை என்பதால், பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல வனத்துறைஅனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி,  இன்று பிரதோஷம், நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் அமாவாசை என சிவனுக்கு உகந்த நாட்களாக உள்ளதால் இன்று 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக் கூடாது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் தங்கக் கூடாது. கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடையில் இறங்க கூடாது. கனமழை பெய்யும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.