எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது நம்பிக்கை இழந்த மக்கள்..! ஓலா நிலைமை என்ன..?

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்தியாவிலும் மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென தற்போது மீண்டும் மின்சார வாகனங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்த கையோடு, BSNL-ன் 10000 டவர் விற்பனை.. யாருக்கு லாபம்..?!

1 சதவீத நுகர்வோர் மட்டுமே

1 சதவீத நுகர்வோர் மட்டுமே

மின்சார இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகளை அரசாங்கம் ஆய்வு செய்து வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கவலைகளுக்கு மத்தியில் 1 சதவீத நுகர்வோர் மட்டுமே அடுத்த ஆறு மாதங்களில் இ-ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம்பிக்கையில்லை

நம்பிக்கையில்லை

 

மின்சார வாகனம் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 32 சதவீதம் பேர் ஆகஸ்ட் மாதத்தில் மின்சார ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த எண்ணிக்கை 17 சதவீதமாக இருந்தது என்பதும், ஐந்து மாதங்களில் மின் வாகனங்களின் மீது நம்பிக்கையில்லாதோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரும்ப பெறப்பட்ட ஸ்கூட்டர்கள்
 

திரும்ப பெறப்பட்ட ஸ்கூட்டர்கள்

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20க்கும் மேற்பட்ட மின்சார இரு சக்கர வாகனங்கள் தீ விபத்தில் சிக்கியதால் ஓலா உள்பட ஒருசில நிறுவனங்கள் விற்பனை செய்த சுமார் 7,000 ஸ்கூட்டர்களை தானாக முன்வந்து திரும்பப் பெற்று கொண்டன

வழிகாட்டு நெறிமுறைகள்

வழிகாட்டு நெறிமுறைகள்

மேலும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கான தரத்தை மையமாக கொண்ட’ வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (CFEES) மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்கள் குழுவை அரசு அமைத்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

ஆர்வம்

ஆர்வம்

 

இருப்பினும் இந்த கருத்துக்கணிப்பின்படி எலக்ட்ரிக் வாகனங்களின் மீது அதிருப்தி தெரிவித்தவர்களில் 1 சதவீதம் பேர் அடுத்த 6 மாதங்களில் மின் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஏறக்குறைய 5 சதவீதம் பேர் தாங்கள் மின் வாகனங்களை வாங்க ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் இ-ஸ்கூட்டர்களுக்கான உள்கட்டமைப்பு குறித்து நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் 7 சதவீதம் பேர் இ-ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு நிதி இல்லை என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Only 1% of Indians plan to buy e-scooters in 6 months over safety, performance concerns!

Only 1% of Indians plan to buy e-scooters in 6 months over safety, performance concerns! | எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது நம்பிக்கை இழந்த மக்கள்..! ஓலா நிலைமை என்ன..?

Story first published: Wednesday, August 24, 2022, 11:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.