தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நடத்திய பேரனின் காதுகுத்து மற்றும் மொய் விருந்தில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு சுமார் 8000 நபர்களுக்கு விருந்து வைக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் நா.அசோக் குமார் 8000 நபர்களுக்கு மொய் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் 100 கிடா, 1300 கிலோ கறி வெட்டி விருந்து சமைக்கப்பட்டது.
மேலும், சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு பாயாசம், வடை, சாம்பார் உணவு அளிக்கப்பட்டது. இந்த மொய் விருந்தில் கலந்து கொண்ட நபர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப மொய் வைத்தனர். இந்த பணத்தை எந்திரம் மூலமாக அள்ளி அண்டாவில் அடுக்கி வைத்தனர்.
அத்துடன் வசூலிக்கப்பட்ட பணத்தில் எந்தவிதமான முறைகேடும், நடக்காமல் இருக்க 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. மேலும், இதில் துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
பெரும்பாலும் பண கஷ்டத்தில் இருப்பவர்கள் மொய் விருந்து வைப்பார்கள். ஆனால், சில பணக்கார முதலைகள் கருப்பு பணத்தை மாற்றும் முயற்சியாக இதை கையாள்வார்கள். அந்த வகையில், எம்.எல்.ஏ அசோக் குமாரும் அப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கிசுகிசுத்து வருவது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.