அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 130-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரை தனது நிர்வாகத்தில் முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளார்.
முன்னாள் அதிபர்கள் டிரம்ப் நிர்வாகத்தில் 80-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும், ஒபாமாவின் நிர்வாகத்தில் 60-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் ஜோ பைடன் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 4 பேர் உள்ளதுடன், 20-க்கும் மேற்வட்டவர்கள் முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.
காலநிலை கொள்கை குறித்த பைடனின் ஆலோசகராக சோனியா அகர்வாலும், ஜில் பைடன் அலுவலகத்தில் டிஜிட்டல் இயக்குநராக கரிமா வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.