லாஸ்
ஏஞ்சல்ஸ்:
ஹாலிவுட்டின்
பிரம்மாண்ட
இயக்குநர்
ஜேம்ஸ்
கேமரூன்
இயக்கத்தில்
உருவாகி
உள்ள
அவதார்
2ம்
பாகம்
இந்த
ஆண்டு
டிசம்பர்
16ம்
தேதி
வெளியாகிறது.
வருகிறது
Avatar
|
சினிமா
செய்திகள்
அப்டேட்
இந்நிலையில்,
அவதார்
2ம்
பாகத்திற்கு
முன்பாக
அவதார்
படத்தை
ரசிகர்களை
பார்க்க
வைக்க
4கே
தொழில்நுட்பத்தில்
ரீமாஸ்டரிங்
செய்யப்பட்டு
அதை
வெளியிட
முடிவு
செய்துள்ளார்
ஜேம்ஸ்
கேமரூன்.
அவதார்
வைப்
ஆரம்பித்தால்
தானே
அவதார்
பார்ட்
2வுக்கான
எதிர்பார்ப்பு
எகிறும்
என்பதில்
கவனமாக
செயல்பட்டு
வருகிறார்
ஜேம்ஸ்
கேமரூன்.
மீண்டும்
வெளியாகும்
அவதார்
ஜேம்ஸ்
கேமரூன்
இயக்கத்தில்
கடந்த
2009ம்
ஆண்டு
வெளியான
அவதார்
திரைப்படம்
25000
கோடி
ரூபாய்
வசூல்
செய்து
மிகப்பெரிய
சாதனையை
படைத்தது.
அந்த
படத்தின்
வசூலை
அவெஞ்சர்ஸ்
எண்ட்கேம்
திரைப்படம்
ரீரிலிஸ்
செய்யப்பட்டு
முறியடித்தது.
இந்நிலையில்,
உலக
ரசிகர்களுக்காக
அவதார்
படம்
மீண்டும்
வெளியாக
போகிறது.
4கே
தொழில்நுட்பத்தில்
அவதார்
முதல்
பாகமே
கண்களுக்கு
அப்படியொரு
விஷுவல்
ட்ரீட்டாக
அமைந்தது.
அந்த
பாண்டோரா
உலகம்
மற்றும்
அங்கே
இருக்கும்
செடி
கொடிகள்,
மிருகங்கள்
என
அனைத்துமே
கண்களுக்கு
நிறைவான
காட்சியை
தந்தன.
இந்நிலையில்,
4கே
தொழில்நுட்பத்தில்
ரீமாஸ்டரிங்
செய்யப்பட்டுள்ள
அவதார்
மீண்டும்
திரைக்கு
வருகிறது.
எப்போ
வரும்
செப்டம்பர்
23ம்
தேதி
4K
3D
HDR
தரத்தில்
ரீமாஸ்டர்
செய்யப்பட்ட
அவதார்
திரைப்படம்
உலகம்
முழுவதும்
குறிப்பிட்ட
திரையரங்குகளில்
சில
நாட்கள்
பிரத்யேகமாக
வெளியாக
உள்ளன.
அதன்
அறிவிப்பை
புதிய
போஸ்டருடன்
இயக்குநர்
ஜேம்ஸ்
கேமரூன்
வெளியிட்டுள்லார்.
அவதார்
2வுக்கு
வெயிட்டிங்
சுமார்
160
மொழிகளில்
அவதார்
2ம்
பாகம்
டப்
செய்யப்பட்டு
வெளியாக
போவதாக
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.
தண்ணீருக்குள்
அவதார்
வாசிகள்
எப்படி
தங்களின்
வாழ்க்கையை
வாழப்
போகின்றனர்.
அவர்களுக்கு
புதிதாக
என்ன
பிரச்சனை
எங்கிருந்து
கிளம்பப்
போகிறது.
ஜேக்
சுலிவன்
அதை
எப்படி
சமாளிக்கப்
போகிறார்
என்பதை
காண
ரசிகர்கள்
ஆவலுடன்
காத்திருக்கும்
நேரத்தில்
அவர்களை
மேலும்,
வெயிட்டிங்கிலேயே
வெறியேற்ற
அவதார்
படம்
வெளியாகிறது.