புதுடில்லி: தங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரிடம் பா.ஜ.,வில் சேரும்படி பேரம் பேசிய அக்கட்சி, இல்லாவிட்டால், பொய் வழக்குகள், சி.பி.ஐ., அமலாக்கத்துறையினரை சந்திக்க வேண்டியிருக்கும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறுகையில், எங்களது கட்சியை சேர்ந்த அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பார்தி மற்றும் குல்தீப் யாதவை, பா.ஜ., தலைவர்கள் சந்தித்துள்ளனர். அப்போது, 4 பேரும் பா.ஜ.,வில் இணைந்தால் தலா ரூ.20 கோடி வழங்குவதாக கூறிய அக்கட்சி தலைவர்கள், மற்ற எம்.எல்.ஏ.,க்களை அழைத்து வந்தால் ரூ.25 கோடி தருவதாகவும் கூறியுள்ளனர். பா.ஜ.,வில் இணையாவிட்டால் அவர்கள், மணிஷ் சிசோடியாவை போல் பொய் வழக்குகள், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மிரட்டல் விட்டனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,விற்கு இழுத்து, கெஜ்ரிவால் அரசை கலைக்க பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement