முக்கியமான மூன்று கேள்விகள்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நான் எனது முதுகலைப் படிப்பின் ஒரு பகுதியாக தத்துவவியலைப் படித்தபோது, ​​மூன்று முக்கியமான கேள்விகளுடன் பாடத்தில் ஈடுபடக் கற்றுக்கொண்டேன். பின்னர், நான் இந்த கேள்விகளை வாழ்க்கையில் பல்வேறு முக்கியமான சூழ்நிலைகளில் பயன்படுத்தத் தொடங்கினேன், மேலும் இந்தக் கேள்விகளைக் கேட்பதன் மூலம் அந்த சூழ்நிலைகளைக் கையாள்வதில் நிறைய தெளிவுகளைப் பெற்றேன்.

அப்படி என்ன கேள்விகள்? அவை எவ்வாறு உபயோகமாக உள்ளது என்று நாம் பார்க்கலாம்.

Representational Image

கேள்வி # 1 – நீங்கள் சொல்வதின் அர்த்தம் என்ன? (What do you mean?)

ஒருவர் நம்மிடம் ஏதாவது கூறினால் நாம் அவரிடம் ‘நீங்கள் சொல்வதின் அர்த்தம் என்ன?’ என்று கேட்பதின் மூலம் அவர் கூறுவதை சரியாகப் புரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் அவர் மனதில் ஒன்று நினைத்துக்கொண்டு அதை வார்த்தையில் வெளிப்படுத்தும்போது அதை நாம் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. முக்கியமான சந்தர்ப்பங்களில் இந்தக்கேள்வியை கேட்பதின் மூலம் நாம் அவர் என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறார் என்பதை அவரே விளக்க ஒரு வாய்ப்பை வழங்கி தவறான புரிதலை தவிர்க்கலாம். பின்னர் நாம் புரிந்து கொண்டதை நாமே நமது வார்த்தையில் வெளிப்படுத்தி அதை அவரிடமே உறுதி செய்து கொள்ளலாம்.

கேள்வி # 2 – உங்களுக்கு எப்படி தெரியும்? (How do you know?)

இது மிக மிக முக்கியமான கேள்வி. ‘உங்களுக்கு எப்படித் தெரியும்?‘ என்று கேட்பதன் மூலம், அவர் அதை யாரிடமாவது கேட்டு நம்மிடம் கூறுகிறாரா அல்லது நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறிய முடியும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அந்த நபர் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தால், அந்த விஷயத்தை கருத்தில் கொண்டு நாம் மேற்கொண்டு. என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கலாம். இல்லையெனில், நேரடியாக சம்பந்தப்பட்ட நபரிடம் தகவலைச் சரிபார்க்காமல், நமக்குக் கிடைத்த தகவலைக் கொண்டு நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இதனால் அந்த நபரை நாம் நம்பவில்லை என்பது பொருளல்ல. அவர் நேரடியாக சம்பந்தப்படாததால் அவரே அந்த தகவலை தவறாகப் புரிந்து கொண்டு நம்மிடம் கூறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை நாம் தவிர்க்க வேண்டும்.

Representational Image

கேள்வி # 3 – உங்கள் அனுமானங்கள் என்ன? (What are your assumptions?)

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருவர் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தால் கூட பல அனுமானங்களின் அடிப்படையில் ஒரு உண்மையான தகவலை திரித்து தவறாக கூறுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. அவர் மிகவும் நல்லவராகவும் நம்பிக்கைக்கு உகந்தவராகவும் கூட இருக்கலாம். ஆனால் அனுமானங்கள் அனுமானங்கள் தானே தவிர அவை உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘இந்த விஷயத்தில் உங்கள் அனுமானங்கள் என்ன?‘ என்று கேட்பதின் மூலம் நாம் அவரையே அது குறித்து யோசிக்க வைக்கலாம். இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவலையும் அனுமானங்களையும் நாம் பிரித்துப்புரிந்து கொண்டு அது குறித்து நாம் ஒரு முடிவுக்கு வர இயலும். நான் பல சந்தர்ப்பங்களில் தவறான அனுமானங்களால் சில விஷயங்களை தவறாகப்புரிந்து கொண்டு பின்னர் அதை உணர்ந்திருக்கிறேன். இப்பொழுது இது குறித்து தெளிவாக யோசிக்கப்பழகிக் கொண்டிருக்கிறேன்.

மேலே குறிப்பிட்ட மூன்று கேள்விகளும் மிகவும் அடிப்படையானவை. இந்த மூன்று கேள்விகளையும் நான் எனது அலுவலகப்பணியில் மட்டுமல்லாது எனது சொந்த வாழ்க்கையிலும் பல முக்கியமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி வருகிறேன். இவை வாசகர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்களும் முயன்று தான் பாருங்களேன்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.