ரீல்ஸ் சிறுவர்களையும், பெரியவர்களையும் கவரும் பொதுவான தளமாக உள்ளது. அதிலும் சிறுவர்களை அது தன் வசம் ஆக்ரமித்துள்ளது என்றே கூறலாம். இது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இதன் காரணமாக சிறுவர்கள் தங்கள் உடல் நலம், மன நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் கல்வியில் நாட்டம் குறைவதால், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ? என்று பெற்றோரும் கவலைப்படுகிறார்கள்.
ராமநாதபுரத்தில் ஒரு சிறுவனின் விபரீத விளையாட்டால் பெற்றோர்களும் போலீசாரும் திகைத்துப் போய் உள்ளனர். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் கணேசன். இவர் ராமநாதபுரம் வண்டிக்கார தெரு கடை வீதியில் ரோந்து பணியில் இருந்துள்ளார்.
அப்போது சிறுவன் ஒருவன் போலீசாரை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ எடுத்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளான். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.