One Nation, One Charger: மத்திய அரசின் புதிய திட்டம், இதனால் என்ன பயன்?

சமீபத்தில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே சார்ஜர் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா டிஜிட்டல் உலகில் முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது. அடுத்தடுத்து டெக் உற்பத்தியிலும் உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது.

அதே போல் நாளுக்கு நாள் இந்தியாவில் டெக்னாலஜியை நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 162 மில்லியன் பேர் வெறும் ஸ்மார்ட் போன்களை மட்டுமே வாங்கியுள்ளனர். இது எந்தளவு இந்தியா எலக்ட்ரானிக் சந்தையில் ஸ்மார்ட் போன்களின் விற்பனையை அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தியா அரசாங்கம் ஒரே நாடு!ஒரே சார்ஜர்! என்ற திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தியாவிற்குள் பயன்படுத்தும் அனைத்து வகையான மொபைல் , லேப்டாப்,டேப் ஆகிய அனைத்திற்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் டிவைஸை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இதனால் என்ன பயன்?

பொதுவாகவே அன்றாடம் நம் வாழ்வில் மூன்றுக்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களையாவது பயன்படுத்துகிறோம். அவற்றிற்கென தனி தனி சார்ஜர்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் தனி தனியாக எடுத்து செல்ல வேண்டியுள்ளது.மேலும் இதனால் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியும் அதிகரிக்கிறது. அது சுற்றுசூழலுக்கு எதிராகவும் அமைகிறது.

எனவே சுற்றுசூழல் பாதிப்பை கட்டுப்படுத்தவும், இ-குப்பைகளை குறைக்கவும், பயனாளர்களுக்கு அடிக்கடி மறதியால் ஏற்படும் இன்னல்களை தவிர்க்கவும் இது போன்ற திட்டத்தை முன்வைத்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் , லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச், டேப் உள்ளிட்ட சார்ஜபல் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜர் ஒரே அளவு திறனில் வடிவமைக்க பட்டு விடும்.

ஏற்கனவே சமீபத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் உட்பட சி டைப் சார்ஜிங் கேபிள் கொண்டுதான் அறிமுகமாகின்றன. எனவே எதிர்காலத்தில் ஒரே முறையிலான சார்ஜிங் முறையை நோக்கி ஏற்கனவே நாம் பயணிக்க துவங்கிவிட்டோம்.

திட்டமிடல்:
இதற்கான ஏற்கனவே துவங்கிய மத்திய அரசு தற்போது ஒரு நிபுணர் குழு ஒன்றை அமைத்து இது குறித்தான அறிக்கையை இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்க சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

– சுபாஷ் சந்திரபோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.