புனே : பொதுமக்கள் முன்னிலையில், அருவியில் நிர்வாணமாக மனைவியை குளிக்க வற்புறுத்திய கணவன், மாமியார் உட்பட ஏழு பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை முடிவில் ஏழு பேரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு, தொழிலதிபர் ஒருவருடன் 2013ல் திருமணம் நடந்தது.
அப்போது பெண் வீட்டார் அளித்திருந்த தங்க நகைகள் மற்றும் சொத்துக்களை, அடுத்த சில ஆண்டுகளிலேயே கணவன் வீட்டார் வங்கியில் அடமானம் வைத்து விட்டனர். மேலும், அந்தப் பெண்ணின் பெயரில் கணவனே போலி கையெழுத்து போட்டு கடனும் வாங்கியுள்ளார்.அடுத்து, மாமியார், கணவன் மற்றும் அவரது சகோதரர்கள், கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி அந்தப் பெண்ணை சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
மேலும், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றும் கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், கோலாப்பூரில் வசிக்கும் மவுலானா பாபா ஜமாதார் என்ற மாந்திரீகவாதி, ஆண் குழந்தை பிறப்பதற்கு கணவன் வீட்டாருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.அவரின் ஆலோசனைப்படி அந்தப் பெண்ணை ரய்ப்பூரில் உள்ள ஒரு அருவிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அங்கிருந்து தப்பி வந்த பெண், புனே போலீசில் புகார் செய்தார். அந்தப் பெண்ணின் மாமியார், கணவர் மற்றும் அவரது சகோதரர்கள், மவுலான உட்பட ஏழு பேர் மீது புனே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.விசாரணை முடிவில் ஏழு பேரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement