அடுத்த இலக்கு ஐடிபிஐ வங்கி தான்.. 51% பங்குகளை விற்பனை செய்யலாம்..!

ஐடிபிஐ வங்கியின் பங்கு விற்பனை குறித்து இந்திய அரசு சமீப ஆண்டுகளாகவே கூறி வருகின்றது. இந்த பங்கு விற்பனையில் அரசின் வசம் உள்ள குறைந்தபட்சம் 51% பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்கும், எல்ஐசி நிறுவனத்துக்கும் சேர்த்து, மொத்தமாக 94.71% பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் அரசின் வசம் உள்ள பங்குகளும், எல்ஐசி வசம் உள்ள பங்குகளில் கணிசமான பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வாங்கிய கடனை செலுத்தவில்லை: பிரபல நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடும் ஐடிபிஐ வங்கி!

பங்கு விற்பனை திட்டம்

பங்கு விற்பனை திட்டம்

தற்போது அரசின் வசம் உள்ள பங்கில் எவ்வளவு, எல் ஐ சி வசம் உள்ள பங்கில் எவ்வளவு என்பதையும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த பங்கு விற்பனைக்கு பிறகும், அரசின் வசமும், எல்ஐசி வசமும் கணிசமான பங்குகள் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

தனியார் வசம் நிர்வாகம்

தனியார் வசம் நிர்வாகம்

இந்த பங்கு விற்பனைக்கு பிறகு இவ்வங்கியின் முழு நிர்வாகமும் தனியார் கையில் ஒப்படைக்கப்படும் என்றும், அதன் பின்னர் தனியார் வங்கியாக சுதந்திரமாக ஐடிபிஐ செயல்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

செப்டம்பரில் இறுதி முடிவு
 

செப்டம்பரில் இறுதி முடிவு

இது குறித்து அமைச்சர்கள் குழு இறுதி முடிவெடுக்கும் என்றும், செப்டம்பர் மாதம் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

கடந்த 12 மாதங்களில் எல்ஐசி-யின் பங்கு விலையானது 6.3% அதிகரித்துள்ளது. இதன் சந்தை மதிப்பு 424.7 பில்லியன் ரூபாயாகும் (5.3 பில்லியன் டாலராகும்)

முதலீட்டாளர்கள் வசம்

முதலீட்டாளர்கள் வசம்

இதில் இந்திய ரிசர்வ் வங்கி முதலீட்டாளர்கள் 40%-க்கும் அதிகமான பங்கினை வாங்க அனுமதிக்கலாம் என்று ப்ளூம்பெர்க் செய்திகள் தெரிவித்துள்ளன. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போது தான் இறுதி முடிவுகள் என்ன என்பது முழுமையாக தெரிய வரும்.

இன்றைய பங்கு நிலவரம்?

இன்றைய பங்கு நிலவரம்?

என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 2.95% அதிகரித்து, 40.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 41 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 39 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 3.08% அதிகரித்து, 40.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 41 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 39 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 65.25 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 30.50 ரூபாயாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Government plans to sell 51% stake in IDBI Bank: report

Government plans to sell 51% stake in IDBI Bank: report/அடுத்த இலக்கு ஐடிபிஐ வங்கி தான்.. 51% பங்குகளை விற்பனை செய்யலாம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.