இந்திய நிறுவனங்கள் தடையை மீறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. அமெரிக்கா அதிகாரி பலே!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையால், மேற்கத்திய நாடுகள் பலவும், ரஷ்யா மீது தடை விதித்து வருகின்றன. இதன் மூலம் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைபடுத்த நினைத்தன.

ஆனால் மேற்கத்திய நாடுகளின் தடையை கண்டுகொள்ளாமல், இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக இந்தியா வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக சலுகை விலையில் எண்ணெய் வாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

ஜெர்மனி-வை பந்தாடும் விளாடிமிர் புதின்.. ரஷ்யா திடீர் அறிவிப்பு..!

எந்த நிறுவனமும் தவிர்க்கவில்லை

எந்த நிறுவனமும் தவிர்க்கவில்லை

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை இந்திய நிறுவனங்கள் தவிர்த்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்காவின் கருவூலத்துறை துணை செயலர் வாலி அடியோமோ தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் தீவிரம்

நிறுவனங்கள் தீவிரம்

இது குறித்து ஐஐடி மும்பைக்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த அடியோமோ கூறியுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் அவற்றை தீவிரமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்தி வருகின்றன என கூறியுள்ளார்.

மைக்கேல் பத்ரா கவலை
 

மைக்கேல் பத்ரா கவலை

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி, அதிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை ஏற்றுமதி செய்வதாக கவலை தெரிவித்தார். மைக்கேல் பத்திராவின் கருத்து வெளியான சில தினங்களுக்கு பின்னர் அடியோமவின் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் திட்டம்

அமெரிக்காவின் திட்டம்

அமெரிக்கா தலைமையிலான பொருளாதார தடைகள் விரிவடைந்துள்ளதாகவும், அதன் இறுதி நோக்கம், எண்ணெய் ஏற்றுமதி மூலம் ரஷ்யா ஈட்டும் வருவாயை குறைப்பது தான். அதேசமயம் நிலையான எரிசக்தி சப்ளை இருப்பதையும் உறுதி செய்வதாகவும் அடியோமோ தெரிவித்துள்ளார்.

 இந்தியர்களின் செலவு அதிகம்

இந்தியர்களின் செலவு அதிகம்

மேலும் ரஷ்யா உக்ரைன் இடையேயான பொருளாதாரம் மற்றும் பணவீக்க பிரச்சனையையும் சுட்டிக் காட்டினார். மேலும் இந்திய மக்கள் அவர்களின் எரிபொருளுக்காக செலுத்த வேண்டியதை விட கூடுதலாக செலுத்துகிறார்கள் என சுட்டிக் காட்டியுள்ளார்.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

ஆர்யோமோ மும்பையில் உள்ள இரண்டு நாள் திட்டங்களுக்கு பிறகு, டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே இவரின் வருகைக்கு முன்பே எரிசக்தி பாதுகாப்பினை வலுப்படுத்தல், உலகளவில் உணவு பாதுகாப்பு பிரச்சனையை நிவர்த்தி செய்தல், சட்ட விரோத நிதி புழக்கத்தினை எதிர்த்து போராடுதல் போன்ற பலவற்றை பற்றி விவாதிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

There is no evidence that Indian companies have escaping sanctions: US official

There is no evidence that Indian companies have escaping sanctions: US official/இந்திய நிறுவனங்கள் தடையை மீறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. அமெரிக்கா அதிகாரி பலே!

Story first published: Wednesday, August 24, 2022, 18:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.