சென்னை: மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோரை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. காவல்துறையினர் பலத்தையும் அதிகாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நபர்களாகவும் தேவையற்றவர்களாகவும் பார்க்கப்படுவதாக ஆணையம் கவலை அடைந்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவராகக் கருதி நடத்தப்பட்டால் காவல்துறையின் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கை குறையும் என்று தெரிவித்துள்ளனர்.