வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: 500 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியை சந்தித்து வருகிறது ஐரோப்பா கண்டம் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவிய கோவிட் , மக்களின் இயல்பு வாழக்ககை பாதித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக பொருளாதார தேக்கம், விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை, ஆகிய பின்விளைவுகளையும் சில நாடுகள் சந்தித்து உள்ளன. பருவகால நிலை மாற்றம், காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர் ஆகியவற்றாலும் உலகில் பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
இந்த சூழலில், கடந்த 500 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சியை ஐரோப்பிய கண்டம் சந்தித்து வருகிறது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய கழகம் வெளியிட்டுள்ளதாவது,
* இந்த ஆண்டின் (ஜனவரி ) துவக்கம் முதலே ஐரோப்பாவின் பல பகுதிகளில் வறட்சிக்கான அறிகுறி தென்பட்டது, இம்மாதம் துவக்கத்தில் மோசமடைந்து வருகிறது. இப்படியே போனால் நவம்பர் மாதத்தில், மேற்கு ஐரோப்பிய-மத்திய தரை கடல் பகுதிகளில் இயல்பபை விட அதிக வெப்பம் மற்றும் வறட்சி நிலை உச்சம் அடையும்., கோடை காலத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் பல வாரங்கள் நீடிக்கும். காட்டுத்தீ ஏற்படவும் வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* தற்போது ஐரோப்பிய கண்டத்தில் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து குறைந்து வருகிறது. மின்உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. உணவு தானிய விளைச்சலும் குறைந்து உள்ளது.
* ஐரோப்பாவின் 47 சதவீத பகுதிகள் ஈரப்பதம் இன்றி மண் வறண்டு போய் காணப்படுகின்றன. 17 சதவீதம் அபாய நிலையில் உள்ளன. இந்த பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளன.
* கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிட்டனில் பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகள் வற்றியது. தேம்ஸ் நதி பாலவனமானதாக செய்திகள் வெளியாயின. இதற்கு காரணம் அங்கு நிலவிய கோடை வெப்பம். அனல் காற்று ஆகும்.
இதேபோன்று, போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டது.
எனவே மக்களின் சுகாதார பாதிப்புகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement