ஸ்பெயினின் மாட்ரிட் பேருந்து நிலையத்தில் படிக்கெட்டில் சிக்கிய திருடப்பட்ட கார்..!

ஸ்பெயினின் மாட்ரிட் பேருந்து நிலையத்தில், திருடப்பட்ட கார் ஒன்று படிக்கெட்டில் சிக்கியதைக் கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர்.

அப்பகுதியில் உள்ள பார்க்கிங்கில் சாவியுடன் இருந்த காரை திருடிய 36 வயதான நபர், தாறுமாறாக காரை ஓட்டி வந்து பேருந்து நிலையத்தினுள் நுழைந்துள்ளார். பின்னர் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கிய படி காரை ஓட்டி வந்த நபர், படிக்கெட்டில் காரை ஏற்ற முயன்றுள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பின்னர் அந்த காரை தீயணைப்புத்துறையினர் கீழ் தளத்தில் இருந்து தரை தளத்திற்கு படிக்கட்டு வழியாக கொண்டு செல்ல முயன்ற போது படிக்கெட்டில் சிக்கிய நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பின் காரை அகற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.