அமெரிக்க அரசு நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்… முன்எப்போதையும்விட அதிகமாம்!

வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் முதல் சாய்ஸ் இன்றும் அமெரிக்காவாக தான் உள்ளது. சாப்ட்ஃவேர், வங்கிகள், ஹோட்டல் நிர்வாகம், விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அங்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழர்கள் பலர் அமெரிக்க நிறுவனங்களில் உயர் பதவிகளை வகி்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தற்போது அரச உயர் பதவிகளும் தேடி வர ஆரம்பித்துள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியான கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். அவரை தொடர்ந்து, அமெரிக்க அரசு நிர்வாகத்தின் பல்வேறு உயர் பதவிகளில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்களை அமரவைத்து அழகுப் பார்த்துள்ளார் ஜோ பைடன்.

அமெரிக்க வெளியுறவுத் துறை, அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் சேர்த்து மொத்தம் சுமார் 150 இந்தியர்கள் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘ஏலே புடின் காத பாத்தீங்களா?’ ‘பாடி டபுள்’ என்றால் என்ன?

ஒபாமா ஆட்சி காலத்தில் இருந்து அமெரிக்க அரசு நிர்வாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு முக்கியத்துவம அளிக்கப்பட்டு வருகிறது. டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்திலும் இந்த நடைமுறை தொடர்ந்து வந்த போதிலும், அரசு நிர்வாகத்தில் இவ்வளவு அதிகமாக இந்தியர்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்படுவது தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில்தான் என்கின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெருமிதத்துடன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.