பஞ்சாபில் புற்று நோய் மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக இன்று பஞ்சாப் வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த மருத்துவமனையில் சுமார் 2,600 நோயாளிகள் சிகிச்சை பெரும் வகையில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. இது சுமார் ரூ.660 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தர்காண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு தங்கி சிகிச்சை பெரும் வகையில் இந்த மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “இந்தியாவில் மருத்துவமும் ஆன்மிகமும் ஒன்றிணைந்தது. கோவிட் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக நடந்ததற்கு ஆன்மிக – தனியார் கூட்டாண்மை ஒரு எடுத்துக்காட்டு. இது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்தவும் உதவியது. தடுப்பூசி செளுத்திக்கொள்வது அத்தியாவசியமானது” என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் உடனிருந்தார்.
இந்நிலையில் பஞ்சாப் வந்த பிரந்தமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிவிட்டரில் “மோடி கொ பேக்” என்று டிரென்ட் ஆகி வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயம் தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த விவசாய சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிரானது; கார்ப்பரேட்டுகள் வசம் விவசாயத்தை ஒப்படைக்க வகை செய்யும் என எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்தப் போராட்டம் டெல்லியில் மையம் கொண்டது. இந்தப்போராட்டத்தில் சுமார் 700க்கு மேற்ப்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை இழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
பஞ்சாபில் விவசாயிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் இன்னமும் பிரதமர் நரேந்திர மோடி மீது கோவமாகவே உள்ளனர். இதனை மனதில் வைத்து பஞ்சாபில் போராட்டக்காரர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது டெல்லி அரசியலிலிலும் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…