குற்றவாளிகள் விடுவிப்பு சுப்ரீம் கோர்ட் விசாரணை| Dinamalar

புதுடில்லி : பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது.கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

குஜராத்தில் 1992ல் அமலுக்கு வந்த சிறை கைதிகள், தண்டனை குறைப்பு கொள்கை அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபர்ணா பட் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.