சென்னை: ஏ வி எம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை வாணி போஜன் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தவறாக பேசும் நெட்டிசன்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.
வாணி போஜன் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
என்னுடைய வளர்ச்சிக்கு இவர் தான் காரணம்
கேள்வி: உங்களுக்கு சீரியல் பார்க்கும் பழக்கம் உண்டா?
பதில்: நான் சீரியல் பார்ப்பது கிடையாது. நான் நடித்த சீரியல்களை கூட நான் பார்ப்பதில்லை. ஏனென்றால் படப்பிடிப்பு முடிந்து இரவு 8 மணிக்கு தான் வருவேன். தெய்வமகள் சீரியல் பாதி பார்த்துள்ளேன். இயக்குநர் குமரன் தான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம். கண்டிப்பாக வெள்ளித்திரையில் படம் இயக்க வேண்டும் என்று அவரிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளேன். அவர் சார்பாக நான் வெள்ளித்திரையில் இருப்பது உண்மையில் சந்தோஷம் என்றார்.
அவசியம் இல்லை
கேள்வி: நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டீர்களா?
பதில்: பிளாஸ்டிக் சர்ஜரி நான் செய்ததாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருந்தன. உணவு அழற்சி காரணமாக எனது முகம், கை, கால்கள் வீங்கின. மாதவிடாயின்போது எனக்கு இது மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும். படப்பிடிப்பின்போது இதை காரணம் காட்டி லீவு போட முடியாது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு என்னிடம் போதுமான பணம் கிடையாது. எனக்கு அந்த அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் வாணி போஜன்.
திறமை வேண்டும்
கேள்வி: நடிகை அதிதி சினிமாத்துறையில் வந்தது குறித்து பல்வேறான விமர்சனங்கள் வருகிறது?அது குறித்து நீங்கள் விரும்புவது….
பதில்: முதல் பட வாய்ப்பு வேண்டுமென்றால் ஈஸியாக இருக்கலாம். ஆனால் அவற்றை தக்க வைப்பது என்பது ரசிகர்களின் கையில் தான் இருக்கிறது. சினிமாத்துறையில் பின்புலம் இருக்கிறது என்பதற்காக எந்த நடிகர், நடிகைகளையும் ரசிகர்கள் ஏற்று கொள்வதில்லை. திறமை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். நடிகை அதிதிக்கும் இது பொருந்தும். நடிகை அதிதி நன்றாக உழைத்திருக்கிறார். என்னுடைய வாழ்த்துக்களை இந்த தருணத்தில் அவருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
லிப் லாக்
கேள்வி: கவர்ச்சி படங்களில் நடிப்பீர்களா?
பதில்: கவர்ச்சி எனக்கு செட் ஆகாது. கவர்ச்சி எல்லை மீறி மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு செல்லக்கூடாது என்பதே எனது கருத்து. இன்னும் சொல்லப்போனால் ஒரு படத்தில் என்னை கவர்ச்சியாக நடிக்க சொன்னார்கள். நான் வேண்டாம் என்று நழுவினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அப்படத்தின் தயாரிப்பாளர் நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டாய் என்று கூறினார். நான் வருத்தப்பட்டது கிடையாது. படப்பிடிப்பின்போது படக்குழுவினர் லிப் லாக் சீனை ரசிப்பதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வேலையை கவனிப்பதை நேரம் சரியாக இருக்கும். அந்த மாதிரியான படங்களில் நடித்து விட்டு, நான் வெளியே செல்லும்போது முகத்தை தொங்க போட்டுக் கொண்டு செல்வது எனக்கு பிடிக்காது. கவர்ச்சி காட்டும் அளவுக்கு எனக்கு வயதும் இல்லை என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/kndpcShrVlg இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.