புதுடில்லி : ‘ஆயுர்வேதத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம். அதே நேரத்தில் அலோபதி மருத்துவத்தை எதிர்த்து விமர்சிக்கக் கூடாது’ என, யோகா குரு ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக இருந்தபோது, யோகா குரு ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை விமர்சித்து கருத்து தெரிவித்தார். அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:அலோபதி மருத்துவத்தை ராம்தேவ் ஏன் எதிர்க்கிறார். யோகாவை நீங்கள் பிரபலமாக்கினீர்கள்; அது நல்லது. அதற்காக மற்றவற்றை எதிர்க்கலாமா? அவர் பின்பற்றும் முறையால் அனைவரும் குணமடைகின்றனர் என்பதற்கு என்ன உத்தரவாதம். ராம்தேவ், ஆயுர்வேதத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம். அதே நேரத்தில் அலோபதி மருத்துவத்தை எதிர்த்து விமர்சிக்கக் கூடாது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement