உக்ரைனுக்கு கூடுதலாக இராணுவ தொகுப்பினை அறிவித்தார் போரிஸ் ஜான்சன்
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் கண்டிப்பாக வெற்றி பெறும்
ரஷ்யாவிற்கு எதிரான போர் நடவடிக்கையில் உக்ரைனை ஆதரிக்கும் விதமாக கூடுதலாக 63.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள புதிய உதவி தொகுப்பினை பிரித்தானியா வழங்கும் என அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் சுகந்திர தினத்தன்று அறிவிக்கப்படாத சுற்றுப்பயணமாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு புதன்கிழமை பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் விதமாக கூடுதலாக 63.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ தொகுப்பினை பிரித்தானிய வழங்கும் என அறிவித்தார்.
டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட அறிக்கையின்படி, சமீபத்திய தொகுப்பில் 2,000 அதிநவீன ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகள்” அடங்கும், இது உக்ரைனை ரஷ்ய படைகளை ஆக்கிரமிப்பதை சிறப்பாக கண்காணிக்கவும் இலக்கு வைக்கவும் அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Boris Johnson came to #Kyiv on Independence Day
Johnson and Zelenskyy walked through the center of Kyiv accompanied by the military. pic.twitter.com/65dl4zrovd
— NEXTA (@nexta_tv) August 24, 2022
இந்த நிலையில் புதன்கிழமை உக்ரைனின் சுகந்திர தினத்தன உரையில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனில் என்ன நடக்கிறது என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது, அதனால்தான் ஐக்கிய இராச்சியம் உங்களுடன் உள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரதமர் போட்டியில் தோற்றுப்போனால் ரிஷி என்ன செய்வார்? அவரே சொன்ன பதில்
இந்த செய்தியை வழங்கவே நான் இன்று இங்கு வந்துள்ளேன், மேலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், என்று ஜான்சன் குறிப்பிட்டார்.