இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகையை பெரிய அளவில் குறைத்துள்ள நிலையில் பலர் புதிய வேலைவாய்ப்புகளை தேட துவங்கியுள்ளதாகவும், அதனால் அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கும் என்ற கணிப்புகளும் வருகிறது.
இதற்கிடையில் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் சூழ்நிலையிலும், பெங்களூரில் ஏற்கனவே எலக்ட்ரானிக் சிட்டி உட்பட பல பகுதிகளில் மாபெரும் கட்டமைப்பில் அலுவலகத்தை வைத்திருக்கும் இன்போசிஸ் தற்போது புதிதாக ஒரு அலுவலத்தை வாடகைக்கு எடுத்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த செயல் பலருக்கும் பல விதமாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரஷ்யாவை கைகழுவிய மேற்கத்திய நாடுகள்.. நாங்கள் இருக்கோம்.. ஆதரவு காட்டும் இந்தியா.. எதற்காக?
இன்போசிஸ்
இன்போசிஸ் பெங்களூரில் கடந்த சில வருடங்களில் யாரும் செய்திடாத வகையில் மிகப்பெரிய அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இன்போசிஸ் தனது அலுவலக கட்டமைப்பை ஒரு இடத்தில் மட்டும் வைத்திருக்க விரும்பவில்லை.
5 லட்சம் சதுர அடி
இதனால் அலுவலகம் மற்றும் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்காக சுமார் 5 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது இன்போசிஸ். இப்புதிய அலுவலகம் நார்த்கேட் பகுதியில் அமைந்துள்ளது. இந்த Northgate டெக் பார்க் பெங்களூர் விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
நார்த்கேட்
இன்போசிஸ் இந்த நார்த்கேட் அலுவலகத்தை அடுத்த 15 வருடத்திற்கு குத்தகை ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முதல் 5 வருடம் லாக்-ன் ப்ரீயட் என்பதால் இன்போசிஸ் முதல் 5 வருடத்திற்கு வெளியேற முடியாது. சுமார் 5,00,000 சதுரடி கொண்ட அலுவலகத்திற்கு ஒரு சதுரடி-க்கு 51 ரூபாய் வாடகை செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
5000 பேர்
இந்த அலுவலகத்தில் சுமார் 5000 பேர் பணியாற்ற முடியும், தற்போது இருக்கும் நிறுவனத்தின் அலுவலக லீஸ் 2023 மே மாதம் முடியும் நிலையில், இன்போசிஸ் அலுவலகம் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Yelahanka பகுதி
Northgate என்பது Modern Asset Management என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grade-A SEZ டெக் பார்க் ஆகும், இது பெங்களூரின் Yelahanka பகுதியில் சுமார் 13.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 30 லட்சம் சதுரடி-யில் அலுவலகங்கள் அமைந்துள்ளது.
பெங்களூரில் இன்போசிஸ்
இன்போசிஸ் பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 81 ஏக்கர் பரப்பளவில் அதன் சொந்த வளாகத்தைக் கொண்டுள்ளது மற்றும் 2,50,000 சதுர அடி பரப்பளவில் பாரதியா சிட்டியில் ஒரு அலுவலகத்தை வைத்துள்ளது. இதுதவிர நாட்டின் பல பகுதியிஸ் பல அலுவலகங்களை இன்போசிஸ் வைத்துள்ளது.
கோயம்புத்தூர்
இன்போசிஸ் சமீபத்தில் நாட்டின் முக்கிய திறன்வாய்ந்த ஊழியர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக 2ஆம் தர நகரங்களில் நான்கு புதிய அலுவலகங்களையும் அமைக்க முடிவு செய்துள்ளது. இதில் கொல்கத்தா, நாக்பூர், கோயம்புத்தூர், விசாகப்பட்டினம் மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் 1000 இருக்கைகள் கொண்ட அலுவலகங்களை அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
3.35 லட்ச ஊழியர்கள்
2022-23 ஆம் நிதியாண்டில் 21,171 ஊழியர்களை புதிதாக சேர்த்த நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் டெக் மற்றும் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற விரும்பும் நிலையில் அடுத்தடுத்து அலுவலகங்களை இன்போசிஸ் திறந்து வருகிறது. இதன் மூலம் அடுத்த 3 அல்லது 6 மாதத்தில் குறைந்தது 80 சதவீத ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
Infosys leases new office space in Bengaluru; But employees still at WFH
Infosys leases new office space in Bengaluru; But employees still at WFH | இன்போசிஸ்: பெங்களூரில் மிகப்பெரிய அலுவலகம்.. அப்போ எல்லோரும் ஆபீஸ் போகனுமா..?