தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், இது மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக கடந்த ஆறு அமர்வுகளாகவே தங்கம் விலையானது சரிவில் காணப்பட்ட நிலையில், இன்றும் சற்று குறைந்து தான் காணப்படுகின்றது. எனினும் இது மீண்டும் மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 மாத சரிவுக்கு பிறகு தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. வாங்க ரெடியா இருங்க?
தங்கம் விலை அதிகரிக்கலாம்
ஒரு புறம் டெக்னிக்கலாக தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவின் வர்த்தகம் குறித்தான தரவானது சந்தைக்கு எதிராக வந்துள்ளது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து பத்திர சந்தையும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. ஆக இதனாலும் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்திருந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தின் குறிகாட்டி
அமெரிக்காவின் இந்த வணிகம் குறித்த தரவானது, அமெரிக்க பொருளாதாரம் எந்தளவுக்கு சரிவு பாதையில் உள்ளது என்பதை சுட்டி காட்டும் விதமாகவே உள்ளது. ஆக தொடர்ந்து வட்டி விகிதம் இனி அதிகரிக்குமா? என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது. வட்டியை அதிகரிக்காவிட்டால், பணவீக்கத்தினை கட்டுப்படுத்த அரசு என்ன செய்ய போகிறது என பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையில் தான் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது வலுவாக காணப்படுகின்றது.
ஃபெடரல் வங்கியின் முடிவென்ன?
பொருளாதார வளர்ச்சியின் முக்கிய குறிகாட்டியான தரவானது, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பினை இன்னும் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியானது மேலும் கொள்கையில் இறுக்கம் காட்டுமா? என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளது. எனினும் நாளை தொடங்கவுள்ள கூட்டம் குறித்து முதலீட்டாளர்களின் முழுகவனமும் திரும்பியுள்ளது.
வாங்குவது அதிகரிக்கலாம்
தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஆகஸ்ட் மாதத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு தனியார் துறை சார்ந்த வணிக வளர்ச்சியானது சரிவினை கண்டுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பு 0.6% சரிவினைக் கண்டுள்ளது. இது மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கத்தினை விலை மலிவான ஒரு பொருளாக மாற்றியுள்ளது. இதனால் மற்ற கரன்சிதாரர்கள் தங்கம் வாங்குவதும் அதிகரிக்கலாம்.
பாதுகாப்பு புகலிடத்துக்கு ஆதரவு
ஐரோப்பிய பகுதிகளிலும் வணிக வளர்ச்சியானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், மக்களின் வாழ்வாதார செலவினங்களும் அதிகரித்துள்ளது. மேலும் சப்ளை சங்கிலியிலும் ஏற்பட்டுள்ள தாக்கம் மக்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தங்கம் விலைக்கு சாதகமான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஐரோப்பா ரெசசனை நோக்கி செல்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவில் மெதுவான வளர்ச்சி இருப்பதையும் தரவுகள் மூலம் அறிய முடிகிறது. இவை அனைத்தும் பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 2.50 டாலர்கள் குறைந்து, 1758.65 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது தற்போது சற்று குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதே வெள்ளி விலையும் 0.46% குறைந்து, 18.938 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலையும் தங்கம் விலையை போல தடுமாறினாலும் மீண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47 ரூபாய் குறைந்து, 51,370 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் கிலோவுக்கு 105 ரூபாய் குறைந்து, 55,102 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், இது மீடியம் டெர்மில் மீண்டும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4805 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 38,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 5242 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,936 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 52,420 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 60.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 609 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 60,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,050
மும்பை – ரூ.47,250
டெல்லி – ரூ.47,400
பெங்களூர் – ரூ.47,300
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,050
gold price on 24th August 2022: gold prices on dollar pullback amid weak USA data
gold price on 24th August 2022: gold prices on dollar pullback amid weak USA data/தங்கம் வாங்க திட்டமா.. சரியான வாய்ப்பு தான்.. விலை எப்படியிருக்கு தெரியுமா?