கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ரஷ்ய படையினருக்கு உக்ரைன் ராணுவம் இணையா பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிகிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினரின் குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகின்றன.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை வீட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், தற்போதை போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
உக்ரைன் போர்
போர் விதிமுறைகளை மீறி ரஷ்யா பள்ளிகள் வழிபாட்டுத்தளங்கள் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில் போர் விதிமுறைகள் மீறப்படவில்லை என ரஷ்யா மறுத்து வருகிறது. அதே நேரத்தில் தங்கள் நாட்டின் மீதும் உக்ரைன் இராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. அதிர வைக்கும் விதமாக உக்ரைன் பெண்களை ரஷ்யா ராணுவத்தினர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
சிதைந்த நகரங்கள்
சுமார் ஆறு மாதங்களாக நடந்து வரும் இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்ய தரப்பில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் போர் விமானங்கள் டாங்கிகள் வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், உக்ரைனின் நகரங்கள் உருத்தெரியாமல் அழிந்து போய் உள்ளன. இதனை மீட்டுருவாக்கம் செய்யவே பல ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
தீவிரமாகும் போர்
போர் தற்போதைக்கு சற்று மந்தமானாலும், 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் சுதந்திரப் பிரகடனம் மற்றும் படையெடுப்பின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் காரணமாக, வரும் நாட்களில் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தும் என்ற அச்சம் உள்ளது.இந்நிலையில் இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா நிதியுதவி
டிரோன்கள், ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களுக்காக இந்த நிதியானது வழங்கப்படவுள்ளது. குறிப்பாக கையால் ஏவப்படும் வகையிலான சிறிய வகை பூமா ட்ரோன்கள், அதிக திறன் கொண்ட ஸ்கேன் ஈகிள் கண்காணிப்பு ட்ரோன்கள் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய பிரிட்டிஷ் வாம்பயர் ட்ரோன் உள்ளிட்டவை இந்த தொகுப்பில் வழங்கப்படவுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவு
இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா சுமார் 10.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இராணுவ உதவியாக வழங்கியுள்ளது. இதில் ஆகஸ்ட் 2021 முதல் பாதுகாப்புத் துறை பங்குகளில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட 19 ஆயுத உதவிகளும் அடங்கும். இதுமட்டுமல்லாது கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கு 3.85 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.