பொதுவாக சைனஸ் பிரச்சனை குளிர் அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படுகிறது.
சைனஸ் பிரச்சனையை சந்திப்பவர்கள் அடிக்கடி சளி, ஜலதோஷம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
இவற்றை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலனை காணலாம்.
- ஒரு பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதிலிருந்து வரும் நீராவியை சுவாசிக்கலாம். இதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது சுவாசப் பாதையில் உள்ள சளியைக் கரைத்து வெளியேற்ற உதவி புரிந்து, சைனஸ் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.
- சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது ஒன்று அல்லது இரண்டு துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை ஒரு துணியில் ஊற்றி, அதை சுவாசிக்க வேண்டும். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- சுடுநீரில் சிறிது மிளகுத் தூளை சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும். வேண்டுமானால் இதில் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளலாம். ஆனால் வாய்ப்புண் இருந்தால், இந்த வழியைப் பின்பற்றாதீர்கள்.