சென்னை: எதிர்காலத்திற்காக இன்றே முதலீடு செய்வது எப்போதுமே நல்ல யோசனை தான், ஆனால் இந்திய சந்தையில் பல தரப்பட்ட மக்களுக்கு ஏதுவாகப் பல திட்டங்கள் இருக்கும் நிலையில் எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் எப்போதும் ஒரு குழப்பம் இருக்கும்.
நீண்ட கால முதலீடுகள் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இரு விஷயங்கள் ஒன்று பாதுகாப்பு, மற்றொன்று லாப அளவுகள். இவை இரண்டையும் பூர்த்தி செய்யும் ஒன்று தான் எல்ஐசி. இந்தியாவில் பணக்காரர்கள் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் நம்பி முதலீடு செய்யும் ஒரு நிறுவன திட்டம் என்றால் அது எல்ஐசி தான்.
இந்நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் பற்றித் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் வாடிக்கையாளரா நீங்க.. இனி உங்க EMI அதிகரிக்கலாம்..!
எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம்
எல்ஐசி நிறுவனத்தின் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் என்பது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனிநபர் ஆயுள் உத்தரவாதத் திட்டமாகும். இந்தப் பாலிசியின் கீழ், தினமும் ரூ.29 முதலீடு செய்தால் ரூ.4 லட்சம் வரையில் பெறலாம்.
ஆயுள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு
இந்தத் திட்டம் ஆயுள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அளிக்கும் கலவையான திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்த பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக மரணம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலிசிதாரர் திட்டம் முதிர்வு அடையும் வரையில் உயிருடன் இருப்பின் மொத்தத் தொகையும் கிடைக்கும். கூடுதலாக, இந்தத் திட்டம் ஆட்டோ கவர் மற்றும் கடன் வசதிகளையும் அளிக்கிறது.
3 லட்சம் வரை
எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் குறைந்தபட்ச உறுதி தொகை 75000 ரூபாய், அதிகப்படியான உறுதி தொகை 3 லட்சம் ரூபாய், இதன் மூலம் ஒருவர் இத்திட்டத்தில் அதிகப்படியாக 3 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 10 முதல் 20 வருடம். இதில் ப்ரீமியம் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர அடிப்படையில் செலுத்தலாம்.
ஒரு நாளைக்கு 29 ரூபாய்
30 வயதில் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தைத் துவங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரு நாளைக்கு 29 ரூபாய் சேமித்து முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் ஒரு வருடத்தில் 10,959 ரூபாயை இத்திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதை நீங்கள் 20 வருடங்கள் தொடர்ந்து செய்து வந்தால் 20 ஆண்டுகளில் ரூ.2,14,696 தொகையை முதலீடு செய்வீர்கள், முதிர்வு நேரத்தில் அதன் வருமானம் ரூ.3,97,000 ஆகும்.
பெண்கள்
8 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து லாபம் பெறலாம். இந்தத் திட்டம் எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்யாமல் நிலையான ஆரோக்கியமானவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று எல்ஐசி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
LIC Aadhaar Shila Policy: Get Rs 4 Lakh on Investing Rs 29 Everyday
LIC Aadhaar Shila Policy: Get Rs 4 Lakh on Investing Rs 29 Everyday வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. பெண்களுக்கான சிறப்பு எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம்..!