‛பிரம்மாஸ்திரா' புதிய அனுபவத்தை தரும் : ரன்பீர் கபூர்

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா முக்கிய பாத்திரங்களில் நடிப்பில் இந்தியாவின் பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா பாகம் 1. மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் செப்., 9 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தினை தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநர் ராஜமவுலி வெளியிடுகிறார். படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர் ரன்பீர்கபூர், நாகர்ஜூனா, ராஜமவுலி ஆகியோர் சென்னையில் பிரமாண்ட விழாவில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

ரன்பீர் கபூர் கூறியதாவது : பிரமாஸ்திரம் திரைப்படத்தை உங்கள் முன் எடுத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கலாச்சாரத்தை பெரிதும் மதிக்கும் சமூகத்தில் நான் என் திரைப்படத்தை எடுத்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திரைப்படத்தின் மூலக்கதையை இயக்குனர் என்னிடம் 10 வருடத்திற்கு முன் கூறிய போது, அந்த ஐடியா எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. அமிதாப், நாகார்ஜுனன் போன்ற திரை ஜாம்பவான்களுடன் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தப்படத்தில் தான் நான் ஆலியாவுடன் பழக ஆரம்பித்தேன் இப்போது கல்யாணம் ஆகிவிட்டது எனக்கு இந்தப்படம் மிக முக்கியமான படம் உங்கள் எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும்'' என்றார்.

நடிகர் நாகார்ஜுனா கூறியதாவது : இயக்குனர் அயன் ஒரு காமிக் புத்தகத்துடன் என்னை அணுகினார், அதை படிக்க சொன்னார். அதில் எனது கதாபாத்திரத்தின் முழு தகவலும் இருந்தது. எனது கதாபாத்திரம் நந்தி அஸ்திரத்தை மையப்படுத்தி இருந்தது. எனக்கு இதிகாசங்கள் மேல் எப்பவும் ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அதனால் இதிகாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கபட்ட கதை என்பதாலே நான் இதில் நடிக்க ஒத்துகொண்டேன். படத்தின் விஷுயல்கள் சிறப்பாக வந்துள்ளது. அயன் உடைய 10 வருட உழைப்பு இந்த திரைப்படம். ரன்பீர் ஆலியா மிகச்சிறந்த உழைப்பாளிகள். சினிமா மீது காதலுடையவர்கள் இந்தப்படம் பெரிய வெற்றியை பெறும் என்றார்.

இயக்குநர் ராஜமவுலி கூறியதாவது : நான் இங்கு இயக்குனராக வராமல், திரைப்படத்தை வழங்கும் ஒருவராக வந்திருக்கிறேன். பிரமாஸ்திரம் இந்த வருட இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். நமது இதிகாசங்களிலும், புராணங்களிலும் இருந்து உருவாக்கபட்ட ஒரு கற்பனை கலந்த கதை தான் இது. இந்த திரைப்படம் ஒரு 8 வருட கடின உழைப்பு. இந்த படத்தில் கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் மிகச்சிறந்த பங்களிப்பினால் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் அஸ்திரங்களை கமர்சியலாக அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் கூறியுள்ளது. இந்த திரைப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.