கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது எண்ணிக்கை 346ஆக உயர்ந்துள்ளது. வீடியோ புகைப்படத்தின் ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக போராட்டம் நடத்துவதற்காக பல தரப்பினரை வாட்ஸ் அப் மூலமாக அழைத்ததாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை தூண்டும் விதமாக அழைப்புகள் விடுத்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வல்லரசு ஆகிய இருவரை வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்தின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். இத்துடன் கைது எண்ணிக்கை 346ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருவதாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM