புதுடில்லி: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் 2002ம் ஆண்டு ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுதும் கலவரம் பரவியது. அப்போது, ராந்திக்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த 12 பேர், அங்கிருந்தவர்களை கொலை செய்து விட்டு, 5 மாத கர்ப்பிணி பில்க்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இதில் அந்தப் பெண்ணுக்கு கரு கலைந்தது.கோத்ரா போலீசார் 12 பேரையும் கைது செய்தனர். வழக்கு விசாரணை நடக்கும்போதே ஒருவர் இறந்து விட்டார். மீதி 11 பேருக்கும் மும்பை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து 2008ல் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து விட்டதால், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றம்
யோசனையின் படி மாநில அரசு ஆகஸ்ட் 15 ல் 11 பேரையும் விடுதலை செய்தது.
சிறை கைதிகள், தண்டனை குறைப்பு கொள்கை அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபர்ணா பட் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement