ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக மாநில அளவிலான 6 நாள் உண்டு, உறைவிட கருத்தாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களுக்கு இதுபோன்று உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்காக ஒன்பதரை கோடி ரூபாயை அரசு ஒதுக் கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறை மேம்பாட்டுக்காக பல நல்ல மாற்றங்களை கொண்டு வரும்போது, மாணவர்களின் நலனுக்காக சில இடங்களில் பின்வாங்குவதில் தவறில்லை. போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவு விரைவில் நனவாகும்.
அதற்காக காவல்துறை முழு ஈடுபாட்டுடன் களமிறங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.