ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக உலக நாடுகள் பல ரஷ்ய நிறுவனங்கள் மீதும், தலைவர்கள் மீதும் தடை விதித்தது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இதில் எந்த தடையும் எதிர்கொள்ளாத ஒரு இந்திய நிறுவனத்தை கட்டம் கட்டி உலக நாடுகளில் இருக்கும் வங்கிகளும், நிறுவனங்களும் ஒதுக்கி வருகிறது. ரஷ்யா உடன் இந்தியா வர்த்தகம் செய்வது பல நாடுகளுக்கு விருப்பம் இல்லாத நிலையில், வல்லரசு நாடுகளின் தடையை மீறும் வகையில் எந்தொரு செயலையும் செய்வில்லை.
இப்படியிருக்கும் போது ஒரு இந்திய நிறுவனத்தை கட்டம் கட்டி உலக நாடுகளில் இருக்கும் வங்கிகளும், நிறுவனங்களும் நெருக்குவது எதனால். இந்திய நிறுவனத்திற்கும், ரஷ்யாவுக்கும் என்ன தொடர்பு..!
ஜெர்மனி-வை பந்தாடும் விளாடிமிர் புதின்.. ரஷ்யா திடீர் அறிவிப்பு..!
Nayara Energy நிறுவனம்
இந்தியாவின் முன்னணி தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் Nayara Energy ரஷ்ய நாட்டின் Rosneft நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். தற்போது உலகின் பல எண்ணெய் வர்த்தகர்கள், வங்கிகள் Nayara Energy நிறுவனத்துடன் பணியாற்றுவதை நிறுத்தியுள்ளனர்.
ரஷ்யாவின் போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் விதித்த தடையில் Nayara Energy இல்லை என்றாலும் Rosneft மீதான தடை பாதிப்பு இந்த இந்திய நிறுவனத்திற்கும் இருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாக இந்நிறுவனத்தை சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகர்கள், வங்கிகள் ஒதுக்க துவங்கியுள்ளது.
ரஷ்யா rosneft
Nayara Energy நிறுவனத்தில் ரஷ்ய எனர்ஜி ஜாம்பவான் ஆக விளக்கும் rosneft சுமார் 49 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதேபோல் Trafigura Group மற்றும் ரஷ்யாவின் UCP Investment Group இணைந்து உருவாக்கிய Kesani Enterprises Co நயரா எனர்ஜி-யில் 49.13 சதவீத பங்குகளை வைத்துள்ளது. நயரா எனர்ஜி இந்தியாவின் 2வது பெரிய தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும்.
நேரடியாக மறுப்பு
விட்டோல் மற்றும் க்ளென்கோர் உள்ளிட்ட பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களும், கனடா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள உற்பத்தியாளர்களும் நேரடியாக நயாராவுக்கு கச்சா எண்ணெயை விற்க நேரடியாகவே மறுத்துவிட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்
நயாரா எனர்ஜி நிறுவனத்தின் மேற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள வாடினார் சுத்திகரிப்பு ஆலைக்கு ஒரு நாளைக்கு 400,000 பேரல் கச்சா எண்ணெய் தேவை. இந்த தேவையை மத்திய கிழக்கு உற்பத்தியாளர்கள், சீன வர்த்தகர்கள், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களை நம்பியிருப்பதாக தெரிகிறது.
முக்கிய நிறுவனங்கள் மறுப்பு
நயாரா எனர்ஜி நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய மறுத்த நிறுவனங்களில் Phillips 66, Occidental Petroleum Corp, Cepsa, Equinor, Gunvor, Koch, Petrogal, Respsol, Shell, Suncor Energy, Ecopetrol மற்றும் TotalEnergies ஆகியவை அடங்கும்.
முக்கிய வங்கிகள் மறுப்பு
சிட்டிகுரூப், மோர்கன் ஸ்டான்லி, BNP Paribas, ஜேபி மோர்கன் , பிரான்சின் என்ஜி மற்றும் Mitsubishi UFJ Financial Group மற்றும் Sumitomo Mitsui ஃபைனான்சியல் குரூப் ஆகிய முக்கிய வங்கி பிரிவுகள் நயாரா எனர்ஜி நிறுவனத்திற்கு புதிய கடன்களையும், நிதியுதவிகளை, நிதி சேவைகளையும் வழங்க நேரடியாக மறுத்துள்ளது.
Indian refiner Nayara Energy left alone; International traders, banks cuts business ties
Indian refiner Nayara Energy left alone; International traders, banks cuts business ties இந்திய நிறுவனத்தை கட்டம்கட்டும் சர்வதேச வங்கிகள்.. காரணம் ரஷ்யா..?!