வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி ஆகலாம். அதேபோல் இன்றைய முதலாளி , நாளைய தொழிலாளியாகலாம் என்பது திருப்பூருக்கு பொருந்தும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திருப்பூரில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மண்டல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, 168 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை துவக்கி வைத்தார்.
நிகழ்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள மாவட்டம் திருப்பூர் ஆகும். 57,900 சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் திருப்பூரில் உள்ளன. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு, குறு நடுத்தர தொழில்களின் பங்கு அதிகம்.
தொழிலதிபர்களாக வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி ஆகலாம். அதேபோல் இன்றைய முதலாளி , நாளைய தொழிலாளியாகலாம் என்பது திருப்பூருக்கு பொருந்தும்.
இதன் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement