புதுடில்லி: இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட திட்டமிட்ட பயங்கரவாதியை, ரஷ்ய அதிகாரிகள், கடந்த வாரம் கைது செய்ததற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ.எஸ்., பயங்கரவாதியை மாஸ்கோவில் கைது செய்ததற்காக, ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய் குவுக்கு நேற்று நன்றி தெரிவித்தார்.முஸ்லிம் மதம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததற்காக, இந்தியாவின் முக்கிய தலைவர் ஒருவரை கொல்லும் நோக்கத்தோடு இருந்த மத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்ததாக ரஷ்ய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
‘இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் துருக்கியில் இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டது. அங்கு பயிற்சி பெற்ற பயங்கரவாதி, ரஷ்யாவில் முக்கிய ஆவணங்களுடன் வந்த போது கைது செய்யப்பட்டார்’ என, ரஷ்ய உளவுப் படையினர் தெரிவித்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement