Delhi MLAs: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை காணவில்லை! மாயமான டெல்லி எம்எல்ஏக்கள்

Absconding AAP MLAs: டெல்லி  மாநிலத்தின் ஆம் ஆத்மி  கட்சியின் எம்எல்ஏக்களை “கவர” பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகள் விவாதப் பொருளாகியுள்ளது. பாஜகவின் இந்த முயற்சி குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கூடினார்கள்.மொத்தம் 62 எம்எல்ஏக்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் 53  பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். மீதமுள்ள 9 எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த கூட்டத்திற்கு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.  

பாஜக என்ன சொல்கிறது?
இதற்கிடையில், கட்சி மாறுவதாகக் கூறப்படும் எம்எல்ஏக்களை அணுகியதாகக் கூறப்படும் நபர்களின் பெயர்களை வெளியிடுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி சவால் விடுத்துள்ளது. டெல்லி அரசின் மதுபான ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்ப கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டுகிறது.

நாளை முதல் சட்டசபை கூட்டத்தொடர்
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை (ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை புதன்கிழமை வெளியிட்ட ஆவணத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் கலால் வரிக் கொள்கை தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கை மற்றும் எம்.எல்.ஏ.க்களை பாஜக கவர்ந்து இழுக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசியல் குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இந்த அமர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ லுக் அவுட் நோட்டிசுக்கு  பதிலளித்தபோது, செய்தியாளர்களைச் சந்தித்த மணீஷ் சிசோடியா, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேயான போராக இருக்கும். அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் மோடிக்கு முக்கிய சவாலாகக் கருதுவதால், அவரைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.