உலகம் அதிவேகமாக டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்தளவு அது வளர்ச்சிக்கு சாதமாக இருந்தாலும் அதே அளவு சமூகத்திற்கு பாதகமாகவும் இருக்கிறது. முன்பை விட இணைய வழி குற்றங்கள் அதிகரித்து விட்டன.
இந்தியாவில் மட்டும் இந்த ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் பதிவான சைபர் குற்றங்கள் 2018ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த எண்ணிகையை விட அதிகம். அந்தளவு நாளுக்கு நாள் உலக அளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
அதில் பிரதானமாக இருப்பது வயதானவர்கள், படிக்க தெரியாதவர்களை குறி வைத்து நடக்கும் ஆன்லைன் பண திருட்டுதான். வாட்ஸப் மூலமாக அல்லது ஏதாவது தகவல் பகிரும் தளம் மூலமாக லின்க் ஒன்றை பகிர்ந்து விடுகிறார்கள் இந்த சைபர் திருடர்கள்.
அதை க்ளிக் செய்யும் பயனர்களின் வங்கி கணக்கிலிருந்து உடனே எவ்வளவு பணம் இருந்தாலும் மாயமாக மறைந்து விடுகிறது. ஏடிஎம் நம்பர் கேட்டு அதன் மூலமாக பணம் திருடுவது என தினம் தினம் புது புது வழிகளில் சாமானிய மக்களின் பணம் திருடு போய் கொண்டிருக்கிறது.
அப்படி சமீபத்தில் ஆந்திராவில் உள்ள அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த வரலக்ஷ்மி என்ற ஓய்வு பெற்ற ஆசிரியரின் வாங்கி கணக்கிலிருந்து 21 லட்சத்தை வாட்ஸப் மூலமாக திருடியுள்ளனர் சைபர் திருடர்கள். சில நாட்களுக்கு முன்புதான் அந்த பகுதிக்கு அருகில் உள்ள வேறு ஒருவரின் பணமும் இப்படி திருடு போனதாக காவல்துறை கூறியுள்ளனர்.
அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், வரலக்ஸ்மியின் வாட்ஸப்பிற்கு புதிய நம்பரிலிருந்து மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதை திறந்து பார்த்தபோது லின்க் ஒன்று இருந்துள்ளது. அது என்னவென்று அறியாத வரலக்ஷ்மி அதை க்ளிக் செய்து உள்ளே பலமுறை சென்றுள்ளார்.
சிறிது நேரத்திலேயே அவரது வாங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுவதாக மெசேஜ் வந்துள்ளது. அதை பார்த்து அதிர்ந்த வரலக்ஷ்மி வங்கிக்கு சென்று அதிகாரிகளை போது அவரது வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அரசு மற்றும் வங்கிகள் மூலமாக இது போன்ற சைபர் குற்றங்கள் சார்ந்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது தெரியாமல் அறியாமையில் இருக்கும் இது போன்ற சிலரின் பணத்தை ஹாக்கர்கள் சுலபமாக திருடி விடுகின்றனர்.
சைபர் க்ரைம் உதவி மைய தொடர்பு எண் : 1930
– சுபாஷ் சந்திரபோஸ்