வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
வீட்டிற்கு வெளியே வேற சோ…ன்னு பேய்மழ பேஞ்சுக்கிட்டிருக்கு…
என்னடாது.. சமூக வலைத்தளத்தை தொறந்தாலே எங்க பாத்தாலும் ஒரே இளவயசு மரணங்களும், அது தொடர்பான பதிவுகளும் வந்து பயமுறுத்துதே . என மனகுழப்பத்துலயே லேப்பு டாப்பை நோண்டிக்கிட்டே படுத்திருந்தவன் ..
அந்த நேரம் பார்த்து செவ்வாய் கிரகத்துல இருந்து பெரிய பாறை ஓன்னு உருண்டோடி வர்றது மாதிரி எனக்கு அருகேயே பேயிடி ஒன்னு படாரென இடிக்க..
அதே நேரம் …
விருந்துக்கு வந்த மாப்புள்ள பாயாசம் வெக்காததுக்கு கோச்சுக்கிட்டு போன கதையா..
விஷ்க்..என.. சட்டென்று மின்சாரம் கோபித்துக் கொண்டு போனது…
அப்டியே.. லேசா அசதியில் கண்ணயர்ந்து விட்டேன்…
நள்ளிரவு ரெண்டரை மணி…..
பேய்மழையோடு.. இப்போ பெரும் காற்றும் சேர்ந்து டூயட் பாட ஆரம்பிச்சிடுச்சு..
ரெண்டு பேரோட டூயட்டும் பேரிரைச்சலா வெளியில கேக்க…
இச்சத்தத்துல திடீரென முழிப்பு வந்துவிட..
இச்சே… இப்போ பாத்தா இந்த பாழாப்போன முழிப்பு வந்து தொலைக்கணும்..
சடாரென…
பாதி தூங்குமூஞ்சியோடு பேந்த பேந்த முழிபிதுங்கி முழிக்கிறேன்..
நான் எங்கிருக்கேன்..சுதாரிக்கிறதுக்குள்ள ..
கதவுக்கு பின்னே!..
தடதடன்னு.. ஒரே சத்தம்..
அப்போது.. மூக்கு துவாரத்தை அன்று முளைத்த மல்லிகை மொட்டுக்களோட வாசம் துளைத்து எடுக்க…
ஆஹா.. என்ன ஒரு வாசம்..இந்த நடுநிசியில் நெஞ்சை அள்ளுதே!..
என காற்று, மழையோடு.. இப்போ என்னிருதயமும் “மல்லிகை மொட்டு மனச தொட்டு இழுக்குதய்யா ஆள’ன்னு என டூயட் பாட ஆரம்பித்தது…
பாடிய கொஞ்ச நேரத்துல அந்த ஒரு ஓசையை கேட்டதும் ..
என்னோட BODY படபடக்க ஆரம்பித்தது..
இதய துடிப்பு இறுமியது..
மல்லிகை வாசனையோடு.., இப்போ ‘ஜல் ஜல் ஜல்லென கொலுசொலி சலசலக்க காலடிச் சத்தம் காத்து வாக்கில் சேர்ந்து..
காதுக்குள் நுழைந்து வர…
சப்த நாளங்கள் ஒடுங்கி..,
சகல நரம்புகளும் விரைக்க ஆரம்பித்தது..
விர்ர்ட்ட்டு… என ஒரு கரம் ஜன்னலை திறப்பதுபோல் ஒரு சத்தம்..
யாரோ இருதயத்தின் மீது இருபதுகிலோ மைதா மூட்டையை வைத்ததுபோன்று ஒரு பெருங்கனம் நெஞ்சாங்கூட்டை நசுக்கியது,.,
என்ன இது…
என இருதயம் தனக்குள் கேட்டுக் கொண்டே தடுமாற…
என்ன நடந்தாலும் போர்வையை முகத்தை விட்டு விலக்கி விட கூடாது..????
என இறுதிநேர தீர்மானத்தை இதயம் அப்போதே தனக்குள் போட்டுக் கொண்டது..
ஜல்..ஜல்..கொலுசொலியின் ரீங்காரம் ..
இப்போது என் செவியறையை விட்டு நீண்டதூரம் போனது போன்ற ஒரு பிரமை..
ஆனால்..மல்லிகை மணம் மட்டும் மூக்கு துவாரத்தை விட்டு அகலவில்லை..
சரி., என்ன இருந்தாலும்.., என்னவென்று பார்த்துவிடுவோம்.. என ஒரு அசட்டு தைரியத்தை வலுக்கட்டாயமாக வரவைத்து…
போர்வையை விலக்கி கண்களை ஜன்னலுக்கு செலுத்தினேன்..
அங்கே!..நான் கண்ட காட்சி…?????
ஓ’வென என் வாயை அலற வைக்க எண்ணியது…
நான்கு விரல்களும் எனது வாயை கத்தவிடாமல் பொத்திக் கொள்ள ..
இதயத்தை அழுத்திக் கொண்டிருந்த இருபதுகிலோ மைதாமூட்டை இப்போ இருநூறு கிலோ’வாக கனத்தது..
அரைநாளாக அடக்க மறந்த அடுப்பில் கொதிக்கும் கோழி குழம்பைப் போன்று என் குருதி கொதித்தது,,,
இப்போது மட்டும் BP மெஷின் இருந்திருந்தால் 100,200,500 என நொடிமுள் ரேஞ்சுக்கு சுத்தி வந்து கடைசியில நம்பர் பத்தாம ‘E’ ன்னு ERROR காட்டி இருக்கும் ..
காலைமுதல் கணினி திரையில் தட்டச்சு செய்த விரல்கள் இப்போது கால் விரல்ளோடு சேர்ந்து கட்டாந்தரையில் தட்டச்சு செய்தது..
விழித்திரை பட்டென விழியை மூடி கண்ட காட்சியை மறுஒளிபரப்பு செய்து கொண்டே இருந்தது..
ஆம்..அங்கே கண்ட காட்சி..????
ஜன்னக்கு வெளியே ஓர் உர்ர்ர்ருவம்..!!!!!!!!!!!!
தலைவிரி கோலத்துடன்..தனது ஈரத்தலையை ஜன்னலில் காயவைத்தபடி வெளியே நின்றது..
சப்த நாளங்களும் ஒடுங்க..இப்போது காற்றின் காதல் பாடலும்.., காலக் கடிகையின் முட்கள் நகரும் சத்தமும் காதை விட்டு காத தூரம் போக..
அந்த உருவத்தின் தலையிலிருந்து வடியும் நீர் ..
ட்டிங்..ட்டிங்…என சத்தமிட்டுக் கொண்டே!!..
சொட்டு..சொட்டாக வடிந்து தரையில் புரியாத கோலமிட்டது…
இதய லாப்டாப்.. லப்டப்..லப்டப்.. என ஆபத்து நேர நோட்டிபிகேஷனை அள்ளி தெளித்தது…
கைவிரல்கள் படுத்திருக்கும் பாயின் கோரை புற்களை பிய்த்து கொண்டே..
அந்த உருவத்தின் கோரை பற்களை எண்ணி பயந்து கொண்டிருந்தது..
அப்போதுதான் அது நிகழ்ந்தது..??????????
ஆம்..!!!!!!!!!!!!!!
சட்டென விட்டு சென்றிருந்த மின்சாரம் ..
மின்சாரம் வந்த மனோ தைரியத்தில் மனதுக்குள் ஆயிரம் “அர்னால்டு சுவாசனேக்கரு ” பலத்தை ஒருசேர வரவழைத்து போர்வையை பலம் கொண்டு இழுத்து…
ஜன்னலைப் பார்த்தேன்…????
அங்கே…!!!!!!!!!!!!!!!!!
இப்போதும் அந்த ‘உர்ர்ர்ருவம்’ நின்று கொண்டிருந்தது…???
இப்போது தெளிவாக தெரிந்தது..!!!!
அந்த உருவம்..
என்னைப் பார்த்து எனது பயத்தைப் பார்த்து பல்லிளித்தது..
அது…?????
வேற ஒன்னும் இல்லீங்கோ..!!!!!!!!!!!!
மழை நேரத்துல நைட் ஒன்னரை மணிக்கு என்னோட பையன் உச்சா போனத தொடச்சி கழுவி எம் பொஞ்சாதி தலைமேலா காயப் போட்டு வைத்த வீடு துடைக்கும் …
…”மாப்ப்பூ” …!!!!!!!!!!!
மாப்பு.. வெச்சுட்டாயா….ஆப்பு….
ஆமா., அப்போ அந்த மல்லிகை மனம்????
மல்லிகை வாசனை மங்கையின் கூந்தலில் இருந்து வருவது எல்லாம் TK பாகவதர் காலம்…
மங்கை மகன் உச்சா துடைக்க வாசனை திரவியம் வருவதுதான்
2K பாலகர் காலம்…
கதை’ கரு’வும் ‘உரு’வும்.
–பாகை இறையடியான்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.