அம்பானி, அதானி என்.டி.டிவியின் பங்குகளை எப்படி தன்வசமாக்கிக்கொண்டனர்?

கடந்த செவ்வாய் கிழமை கெளதம் அதானி, என்.டி.டிவியின் 29.18 % பங்குகளை வாங்கினார். மேலும் இந்நிறுவனத்தின் 26 % பங்களையும் வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது அதானி குழுமம்.

இந்த வருடம் மே மாதம், டிஜிட்டல் செய்தி நிறுவனமான  ப்ளூம்பர் க்யூண்ட் (BloombergQuint) 49 % பங்குகளை வாங்கப்போவதாக தெரிவித்தது. மேலும் தனியார் செய்தி தொலைக்காட்சியின் பங்குகளை வாங்கப்போவது மூலமாக தனது வியாபாரத்தை விரிவாக்க உள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில் என். டி. டிவியின் 29.18 % பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளது. இது தொடர்பாக தங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அதன் முக்கிய நிறுவனர்களான ராதிகா ராய் மற்றும் பிரனாய் ராய் தெரிவித்துள்ளனர். இவர்கள்தன் நிறுவனத்தின் 32.26 % பங்குகளை தங்கள் வசம் வைத்துள்ளனர்.

விஷ்வபிரதான் கமெர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை ரூ113.74 கோடிக்கு வாங்விட்டதாக அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் தெரிவிதிருந்தது.

இந்த நிறுவனம் என்.டி.டிவியின் 29.18% பங்களை வைத்துள்ளது.இந்த நிறுவனத்தை அதானி வாங்கியுள்ளதால், இந்த பங்குகள் அதானிக்கு சென்றுள்ளது.

என்.டி.டி.வியின் நிறுவனர்கள் ராதிகா ராய் மற்றும் பிரனாய் ராயிடம் 61.45% பங்குகள் உள்ளன. இதில் 29 % பங்களை ராதிகா ராய், பிரனாய் ராய்யின் ஆர்ஆர்ஆர் நிறுவனம் வைத்திருந்தது. இந்நிலையில் 2009ம் ஆண்டு ஆர்ஆர்ஆர் நிறுவனம் விஷ்வபிரதான் நிறுவனத்திடமிருந்து ரூ.403 கோடி கடன் வாங்கியது.

ஆர் ஆர் ஆர் நிறுவனம் கடன்களை செலுத்தவில்லை என்பதால் அதன் பங்குகள் தற்போது விஷ்வபிரதான் நிறுவனத்திடம் சென்றுள்ளது.

எதற்காக அதானி என்.டி.டிவியின் முக்கிய பங்குதாரராக பார்க்கிறார் ?

அதானி குழுமம், ஊடகத்துறையில் நிழைய தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஊடகவியலாளர்  சஞ்ஜை புகழியாவை அதன் ஊடக நிறுவனத்தின் தலைவராக நியமித்தது. க்யுன்ட் (Quint )  என்ற பத்திரிக்கை நிறுவனத்தின் டிஜிட்டல் இயக்குநராக இருந்தவர் புகழியா .  இவர் கூறுகையில் ” எங்களது லட்சியங்களை செயல்படுத்த என்டிடிவியின் ஒரு சிறந்த ஊடக நிறுவனமாக இருக்கும். மக்களுக்கு தேவையான அவர்களை சுதந்திரப்படுத்தும், செயல்பாடுகளை செய்திகளாக மாற்ற நாங்கள் முயற்சிப்போம். என்டி டிவியின் ஆளுமையை மேலும் வளப்படுத்த உள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.