இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்கள் மிகக்குறைவு.
அந்த வகையில் சினிமா நட்சத்திரங்களும் தங்களது படங்கள் குறித்தும் பர்சனலான விஷயங்கள் குறித்தும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக பேஸ்புக் மற்றும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்து, அவர்கள் குறித்த தகவல்களை ரசிகர்ளுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த்தும் கடந்த 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ட்விட்டரில் இணைந்தார்.
ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்ததும் அவரைப் பலரும் ஃபாலோ செய்யத் தொடங்கினர்.
அந்தவகையில் ரஜினியை தற்போது 6.2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து ( followers) வருகிறார்கள்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வெறும் 24 பேரை மட்டுமே பின்தொடர்கிறார்.
அவர் பின்தொடரும் பிரபலங்கள் இவர்கள்தான் !
பிரதமர் நரேந்திரமோடி
இந்தி நடிகர் அமிதாப் பச்சன்
நடிகர் தனுஷ்
மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த்,
இசைப்புயல் A.R ரஹ்மான்
இசையமைப்பாளர் அனிரூத் போன்ற பிரபலங்களை மட்டுமே பின்தொடர்கிறார். இதுதவிர்த்து
சில ஆங்கில செய்தி ஊடகங்களை பின்தொடர்கிறார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால், ரஜினிகாந்த் ட்விட்டரில் பின்தொடரும் ஒரே அரசியல் பிரமுகர் பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான்.